சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 7) எபிசோடில் ஆதிரை குணசேகரனை எதிர்த்து மற்ற அண்ணன்களுக்காக சண்டை போடுகிறாள். “அவர்கள் ஏன் இந்த வீட்டை விட்டு போக வேண்டும், அவர்கள் இந்த வீட்டுக்குக்காகவும் பிசினஸ்காகவும் நிறைய உழைத்துள்ளார்கள். அவர்களுக்கும் இந்த வீட்டில் இருக்க உரிமை உள்ளது” எனப் பேச குணசேகரன் அவளை அடிக்க கை ஓங்குகிறார். அதை கதிர் தடுத்து விடுகிறான். மனம் நொந்து போன குணசேகரன் இந்த உறவு ஒட்டாது என சொல்லி விட்டு சென்று விடுகிறார். போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஜீவானந்தம், இன்ஸ்பெக்டரிடம் தர்ஷினி பற்றி வேறு மாதிரியாக சொல்லி வைக்க அங்கே வந்த ஈஸ்வரி நடந்த அனைத்து உண்மைகளை சொல்லிவிடுகிறாள். ஜீவானந்தம் எவ்வளவு தடுத்தும் ஈஸ்வரி அது புரியாமல் உண்மையை சொல்லிவிடுகிறாள். சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர் நால்வரையும் அமைதியாக உட்கார சொல்லிவிட்டு அவர்களின் போனை வாங்கி வைத்து கொள்கிறார். வேறு ஒரு போலீசை அனுப்பி தர்ஷினி இருந்த இடத்தை போய் பார்த்து விசாரித்து விட்டு வரச் சொல்கிறார்.
"அடுத்த வீட்டு பொம்பளைகளை கைக்குள்ள வைச்சுக்கிட்டு சொத்தை எல்லாம் அமுக்க நினைக்குற. அதுக்கு ஏத்த மாதிரி அவன் பொண்டாட்டியும் செத்துப்போனா" என குணசேகரன் வாய் கூசாமல் பேச, டென்சனான ஜனனி "அவங்க சாவுக்கு நீங்க தான் காரணம்" எனக் கொந்தளிக்கிறாள். அதைப் பார்த்து குணசேகரன் முறைக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal ) எபிசோடுக்கான ப்ரோமோ.