எப்படி ஒவ்வொரு வாரமும் புதுப்புதுப் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களின் கவர்ந்து இழுக்கிறதோ அதே போல தான் குடும்ப பெண்களை அதிகளவில் கவர்ந்திழுத்து வருகிறது சீரியல்கள். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் பெருசுகள் முதல் சிறுசுகள் வரை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். சரி இந்த வாரம் எந்தெந்த சீரியல், டிஆர்பி பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்திருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
டாப் 10 சீரியல் TRP
நடப்பு ஆண்டிற்கான டாப் 10 சீரியல்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. கடந்த வாரம் 9ஆவது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர், 6.05 புள்ளிகளை இந்த வாரம் 10ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜீ தமிழில் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் கார்த்திகை தீபம், தொடர் 6.07 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் 6.30 டிஆர்பி புள்ளிகளுடன் 8ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த வாரமும் இந்த சீரியல் 8ஆவது இடத்திலிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் கடந்த வாரம் டிஆர்பியில் 6ஆவது இடத்திலிருந்த அன்னம் தொடர், இந்த வாரம் 6.98 புள்ளிகள் பெற்று 7ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுளள்து.
எதிர்நீச்சல் 2 சீரியல் 7.35 புள்ளிகளுடன், 6ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை 4ஆவது இடத்திலிருந்து சரிந்து 7.78 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியின் சீரியல்கள் தான் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. அதில், முதலிடத்தில் இருப்பது சிங்கப்பெண்ணே சீரியல் தான். 9.30 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
2ஆவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் இருக்கிறது. அதுவும், 9.05 புள்ளிகள் பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தில் 8.80 புள்ளிகள் பெற்று கயல் சீரியல் இருக்கிறது. கடைசியாக மருமகள் சீரியல் 8.48 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10 இடங்களில் சன் டிவியின் 7 சீரியல்கள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.