சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஜீவானந்தத்தை சந்திக்கச் சென்ற ஈஸ்வரி இரவு வரை வீடு திரும்பாததால் வீட்டில் உள்ள அனைவரும் பதட்டத்துடன் இருக்கிறார்கள். சக்தியும் தர்ஷனும் சென்று தேடிப் பார்த்து ஈஸ்வரி கிடைக்காததால் ஒருவேளை அவள் தன்னுடைய அப்பா வீட்டுக்கு சென்று இருப்பாளோ என்ற சந்தேகத்துடன் அவருக்கு சக்தியை போன் செய்து பார்க்க சொல்கிறார்கள். 


 



ஈஸ்வரியின் அப்பா ஈஸ்வரியை நினைத்து மிகவும் கவலையாகப் பேசி ஈஸ்வரியை பற்றி விசாரிக்கவும், அவள் அங்கே செல்லவில்லை எனத் தெரிந்து கொண்டதால் போனை வைத்து விடுகிறான். பின்னர் சக்தியும் தர்ஷனும் பைக்கை எடுத்து கொண்டு ஈஸ்வரி வழக்கமாக செல்லும் இடம் கோயில்களுக்கு சென்று பார்ப்பதற்காக கிளம்ப, அப்போது ஈஸ்வரி அழுது கொண்டே வீட்டுக்குள் வருகிறார்கள். அவள் எதற்கு அழுகிறாள் என்பது புரியாமல் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். எவ்வளவு சமாதானம்  செய்தும் ஈஸ்வரி அழுவதை நிறுத்தவில்லை. 


பின்னர் ஜனனி “இந்த முறை அப்பத்தா மிகவும் நம்பிக்கையாக இருக்கிறார், அவர் நடத்தப் போகும் இந்த பங்க்ஷன் முடிந்த பிறகு நிச்சயம் நல்ல மாற்றம் வரும்” என்பதை சொல்லி ஈஸ்வரியை ஆறுதல் படுத்துகிறாள். 


அடுத்த நாள் காலை விசாலாட்சி அம்மா தேவையில்லாமல் பேரப் பிள்ளைகளை போய் சீண்ட, பதிலுக்கு அவர்கள் அனைவரும் சரியான பதிலடி கொடுக்கிறார்கள். பின்னர் கதிரும் கரிகாலனும் ஊருக்கு கிளம்ப நந்தினி சந்தேகத்துடன் வந்து திருவிழா வேலைக்காக தான் போகிறார்களா இல்லை வேறு ஏதாவது வேலையாக போறாங்களா என கரிகாலனிடம் நக்கலாக கேட்கிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது. 


 




அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ  வெளியாகியுள்ளது :


அனைவரும் ஊருக்கு கிளம்ப தயாராகி கொண்டு இருக்கிறார்கள். சக்தியும் தர்ஷனும் சேர்ந்து லக்கேஜ்களை காரில் எடுத்து வைப்பதை பார்த்த ஜான்சி ராணி திமிராக விசாலாட்சி அம்மாவிடம் "உங்க சின்ன மகனை  வேலைக்காரன் போல தான் வைச்சு இருக்காளுங்க போலயே. இந்த பாருங்க இன்னிக்கு ட்ரைவரா மாத்தி இருக்காளுங்க" என பேச அனைவரும் டென்ஷனாகிறார்கள். 


 



கரிகாலன், கதிர் ஊருக்குச் செல்லும்போது வழக்கமான துடுக்கு பேச்சால் வளவனை டென்ஷன் செய்ய, காண்டான வளவன் துப்பாக்கியை எடுத்து கரிகாலனை நடுரோட்டில் வைத்து சுடுவதற்காக அதை அவன் தலைமேல் வைத்து மிரட்டுகிறார். "இதுக்கு எல்லாமாய்யா துப்பாக்கியை எடுப்பாங்க. யோவ் கதிர் மாமா என்னைக் காப்பது... யோவ் இன்னும் எனக்கு கல்யாணம் முடிஞ்சு பர்ஸ்ட் நைட் கூட நடக்கலையா... " என புலம்புகிறான். இதைப் பார்த்த கதிர் வேகவேகமாக ஓடி வந்து "யோவ் கிள்ளி" என இருவரையும் பிரித்து விடுகிறான். 


 


 




ஊருக்கு ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினி காரில் செல்ல அவர்களுடன் ஜான்சி ராணியும் ஏறி கொள்கிறாள். வழியில் ஈஸ்வரி நின்று கொண்டு இருக்கிறாள். காரில் இருந்து இறங்கிய ஜனனி "என்ன ஆச்சு அக்கா" என பதட்டமாக ஈஸ்வரியிடம் கேட்கிறாள். அனைவரும் அவர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள் . இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.