சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' சீரியல் தற்போது ஸ்வாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. அதிரை - அருண் திருமணம் தான் பல நாட்களாக ஜவ்வு போல இழுத்து கொண்டே போகிறது என்பது தான் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ்சாக இருந்தது. அதனால் இயக்குனர் சற்று புத்திசாலித்தனமாக தற்போது ஜீவானந்தத்தின் என்ட்ரியை கொண்டு வந்துள்ளார். இதனால் கதை மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் என்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக அடுத்தடுத்த எபிசோட்களுக்காக காத்திருக்கிறார்கள்.
ஜனனி அடுத்த ப்ளான் என்ன?
கோமாவில் இருக்கும் அப்பத்தாவின் கைரேகையை எடுக்க ஆடிட்டர் மூலம் மிகவும் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் குணசேகரன். இந்த நிலையில் ஆதிரையின் திருமண ஏற்பாடுகளை மிகவும் வேகவேகமாக செய்து வருகிறார் குணசேகரன். மறுபக்கம் அப்பத்தா கோமாவில் இருந்து கண்விழித்தவுடன் ஜீவானந்ததுடன் பேச வேண்டும் என முயற்சி செய்ய அவருக்கு உதவியாக இருக்கிறார் ஜனனி. ஜீவானந்தம் போன் எடுக்காததால் புத்திசாலித்தனமாக அடுத்து என்ன செய்யலாம் என அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் ஜனனி.
அப்பத்தா கொடுத்துள்ளது போதாதது அதனால் அவரிடம் இருந்து மீதம் உள்ள சொத்துக்களை வாங்க வேண்டும் என்றால் அவரின் கைரேகை தேவைப்படும் அதனால் அதற்கான முயற்சிகளை வேகமாக செய்யவும் என ஆட்களுக்கு கட்டளையிடுகிறார் ஜீவானந்தம். மறுபக்கம் திருமண மண்டபத்திற்கு அனைவரும் வந்திறங்க ஜான்சி ராணி அதிரையிடம் புடவையை கொடுத்து மாற்றி கொண்டு வந்து தன்னுடைய மகன் பக்கத்தில் நிற்கும் படி கட்டளையிடுகிறாள். கடுப்பான ஆதிரை எனக்கு புடிக்கல என கத்தி சொல்ல, உடனே ஜான்சி ராணி இந்த புடவை பிடிக்கவில்லையா இல்லை என்னுடைய மகனையே பிடிக்கவில்லையா என கேட்கிறாள். இதை வைத்து குணசேகரன் எதையோ கெஸ் பண்ணிவிடுகிறார். நம்முடைய மருமகள்கள் நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை அதனால் அவர்கள் ஏதோ பிளான் போடுகிறார்கள் என்பதை சுதாரித்து கொள்கிறார். இது தான் இன்றைய எபிசோட்டுக்கான புரோமோ.
ரசிகர்கள் ஆர்வம்:
இனி என்ன நடக்கப்போகிறது? அருண் - ஆதிரை திருமணத்தை நடத்தி வைத்து குணசேகரனை எப்படி வீழ்த்தப்போகிறார் ஜனனி? ஜீவானந்தத்தால் அப்பத்தாவிற்கு என்ன நல்லது நடக்க போகிறது? அல்லது அதனால் என்னென்ன பிரச்சனைகள் வரப்போகிறது? என மிகுந்த குழப்பத்தில் குழம்பியுள்ளார் ஜனனி. ஜனனி மட்டுமல்ல எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களும் மிகுந்த குழப்பத்தில் தான் உள்ளனர். இனி வரும் எபிசோட்களில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.