Anna Serial: முத்துப்பாண்டி செய்த வேலை.. எதிர்பாராத திருப்பங்களுடன் அண்ணா சீரியல்.. இன்றைய எபிசோட் இதோ..!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்ன என்பதை காணலாம்.

Continues below advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான அண்ணா சீரியலின் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்ன என்பதை காணலாம்.

Continues below advertisement

நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சண்முகத்தை கூப்பிட்டு வைத்து மறைமுகமாக அவமானப்படுத்திய நிலையில் இன்றைய எபிசோடில்,  ஷண்முகம் தனது அம்மாவாக நினைக்கும் மரத்தின் அருகே சென்று கோபப்பட்டுகிறார். மறுநாள் காலையில் எதுவும் நடக்காதது போல குளித்து முடித்து கந்தசஷ்டி கவசம் பாடி தங்கைகளுக்கு ஆரத்தி கொடுக்க வழக்கம் போல எல்லாரையும் ஸ்கூல், காலேஜ்க்கு ரெடியா என பேச தங்கைகள் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி ஷண்முகத்துக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல்ல ஷண்முகம் இதோ வரேன் மாமா என்று வீட்டுக்கு செல்கிறார். அங்கு சௌந்தரபாண்டி என்னாலே கோபமா? சொல்லாமல் கொள்ளாம போய்ட்ட, தங்கச்சிகளும் ஒன்னும் சொல்லல என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா, அப்பா விழுந்து கிடக்கிறதா வெட்டுக்கிளி போன் பண்ணான் என்று சொல்லி சமாளிக்கிறான்.

பிறகு சௌந்தரபாண்டி முத்துபாண்டியை நம்ப முடியாது. நீ தான் உங்க அத்தை கூட இருந்து பரணி கல்யாண வேலைகள் எல்லாத்தையும் பார்க்கணும் என்று சொல்கிறான். ஷண்முகமோ பரணியை பார்த்து விட்டு  சரிங்க மாமா என்று சொல்கிறான். பிறகு பாக்கியம் அப்பாவுக்கு என்னாச்சு என பதற்றத்தோடு கேட்க,  ஷண்முகம் வழக்கம் போல தான் என்று சொல்லி கிளம்ப காபி குடித்துவிட்டு போக சொல்லி உட்கார வைக்கிறாள்.

அப்போது பரணி ஷண்முகத்திடம் என் மேல கோபமா என்று கேட்க முகத்தை பார்க்காமல் அவன் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்கிறான். பரணி அப்படினா கோபம் தான் என்று சொல்கிறாள். பிறகு பாக்கியம் வந்து ஏன் டா முகம் டல்லா இருக்கு என்று கேட்க பரணி என்னை சண்முகத்துக்கு குடுக்கறதா நினைத்து வந்தானாம் என்று சொல்ல அப்படியெல்லாம் இல்ல அத்தை என்று சொல்லி ஷண்முகம் கிளம்புகிறான்.

மறுபக்கம் சிவபாலன் இசக்கியை பார்க்க வருகிறான். அவனிடம் இசக்கி உன்னால் என் அண்ணா ஏமாந்து போய்டுச்சு என கோபப்படுகிறாள். இதனையடுத்து வெங்கடேஷ் வழியில் ரத்னாவிடம் பேச முயற்சிறான். இதைப் பார்க்கும் முத்துப்பாண்டி அவன் தான் ரத்னாவுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை என தெரிந்தும் தெரியாதது போல அவனை அடித்து அரை நிர்வாணத்துடன் நடுரோட்டில் உட்கார வைக்கும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola