சன் டிவி சீரியல்களில் நடித்து வரும் நடிகைகளின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த சீரியல்களில் நடிக்கும் உங்களுக்கு பிடித்த நடிகைகளின் சம்பள விவரங்களைப் பார்க்கலாம்!
தமிழ் திரையுலகில் சினிமாவை விட சின்னத்திரைக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. பெண்கள் மட்டுமே பார்த்து வந்த சீரியல்களை ஆண்களும் இளைஞர்களும் பார்க்க சமீபகாலமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேநேரம், சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் இஸ்டகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர்.
சீரியல் நடிகைகள் போடும் ரீல்ஸ் மற்றும் வீடியோக்களை ஃபாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டமும் உள்ளது. இதனால், நடிகைகளின் தனிப்பட்ட தகவல்களை தெரிந்து கொள்வதில் அவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், சன் டிவி தொடர்களில் நடித்து வரும் சீரியல் நடிகைகளின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தரி சீரியல் கேப்ரில்லா
டிக்டாக் மற்றும் ரீல்ஸ் மூலம் பிரபலமான கேப்ரியல்லா செல்லஸ் சன் டிவியில் வெளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். அதில் ஹீரோயினாக நடித்து வரும் கேப்ரியல்லா ஒரு நாளைக்கு ரூ.40,000 வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சீரியல் மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும் கேப்ரியல்லா நடித்து வருகிறார்.
தாலாட்டு சீரியல் ஸ்ருதி ராஜ்
தென்றல் சீரியல் மூலம் பிரபலமான ஸ்ருதி ராஜ், சில திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். ஸ்ருதி ராஜ் தான் நடித்த தாலாட்டு சீரியலுக்காக ஒரு நாளைக்கு ரூ.40,000 வரை சம்பவளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கயல் சீரியல் சைத்ரா ரெட்டி
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து பிரபலமான சைத்ரா ரெட்டி சன் டிவில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிப்பதற்காக சைத்ரா ரெட்டிக்கு நாளொன்றுக்கு ரூ.25,000 வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சைத்ரா ரெட்டி வலிமை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இனியா சீரியல் ஆல்யா மானசா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் நடிப்பதற்காக ஆல்யாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்நீச்சல் சீரியல் மதுமிதா
அனைவராலும் அதிகமாக பேசப்படும் சீரியல் எதிர்நீச்சல். கூட்டுக் குடும்பத்தில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை கூறும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் மதுமிதா நடித்து வருகிறார். இதில் நடிப்பதற்காக நாளொன்றுக்கு ரூ.15,000 சம்பளமாக மதுமிதா பெறுவதாகக் கூறப்படுகிறது.