சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் முதல் நாள் வெளியே சென்ற சக்தியும் ஜனனியும் இன்னும் வீடு திரும்பவில்லை என மிகவும் கவலையுடன் யோசித்து கொண்டு இருக்கிறார்கள் நந்தினியும் ரேணுகாவும். குணசேகரனால் அவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்து இருக்குமோ என சந்தேகப்படுகிறார்கள். 


மறுபக்கம் சென்னை சென்றுள்ள குணசேகரன் மற்றும் கதிர் அந்த முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளவனை சந்திக்கிறார்கள். நடந்த அத்தனை பிரச்சனை குறித்தும், ஜீவானந்தத்தை போட்டு தள்ளுவது குறித்தும் வளவனிடம் கூறுகிறார்கள். 


 



ஷாக் கொடுத்த ஜான்சி :


ஆதிரை கரிகாலனோடு அவன் வீட்டுக்கு வர முடியாது என்று சண்டை போட்டுக் கொண்டு இருக்க, அந்த நேரத்தில் ஜான்சி ராணி என்ட்ரி கொடுக்கிறாள். ஆதிரையை "இப்போ வீட்டுக்கு வர போறியா இல்லையா?" என மிரட்டுகிறள். மேலும் பேசும் போது "உன்னை என மகன் கல்யாணம் செய்து கொள்வதற்காக மண்டபத்தை கதிர்வேல் பேருக்கு எழுதி கொடுத்துவிட்டு தான் கல்யாணம் பண்ணோம்" என்ற உண்மையை உடைத்தும் அனைவரும் ஷாக்காகிறார்கள். "இதற்கு ஒரு முடிவு தெரிய வேண்டும். நீ ஒழுங்கா வரலைனா உன்னையும் உன்னோட அண்ணன்களையும் ஒரு வழி செய்யாமல் இங்கிருந்து போகமாட்டேன்"என மிரட்டுகிறாள். 


ஆதிரையும் "நானும் இந்த முடிவுக்காக தான் ரொம்ப நாட்களாக காத்துகொண்டு இருக்கிறேன். இப்போ நான் வெளியே போறேன். போய்விட்டு திரும்பி வந்து என்னோட முடிவை சொல்றேன்" என கூறிவிட்டு வெளியே செல்கிறாள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது. 


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர் நீச்சல் (Ethir neechal) எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 


 



ஆதிரைக்கு காத்திருந்த அதிர்ச்சி:


ஜனனியும் சக்தியும் ஜீவானந்தம் பற்றி தகவலை சேகரிக்க அலைகிறார்கள். ஆதிரை அருண் வீட்டுக்குச் சென்று அருணிடம் பேசுகிறாள். ஆனால் அருணின் சித்தப்பா அவளை வெளியே போக சொல்ல, "ப்ளீஸ் அங்கிள் என்னை புரிஞ்சுக்கோங்க"எனக் கெஞ்சுகிறாள். அருண் சித்தப்பா "இவ இங்க வந்து இருக்கானு அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் எனத் தெரியுமா?" என்கிறார். அருகில் அருணின் அண்ணி சாரு பாலாவும் இருக்கிறார். "ஆதிரை என்ற ஒரு பொண்ணு இனிமேல் என் லைஃப்ல இல்ல. கிளம்ப சொல்லுங்க" என சொல்லிவிட்டு செல்கிறான் அருண். அருண் இப்படி சொல்வான் என கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆதிரையால் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 


 



எல்லாமே நடிப்பா ?


குணசேகரன் கையை அசைத்து பேசுவதை பார்த்து வளவன் "என்ன பா கையை எல்லாம் மேல தூக்கி பேசுற?" என்கிறார். அதற்கு நாம் அனைவரும் எதிர்பார்த்தது போல "அது அப்போ அப்போ மேல வரும். கையில எல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை. எல்லாம் நடிப்பு சார். அதுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கு" என்கிறார். இதை கேட்ட கதிர் ஷாக்காகிறான். இது தான் இன்றைய எபிசோடுக்கான ஹிண்ட்!