சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்கள் மீண்டும் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தாள் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ கல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வயது வித்தியாசம் இல்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக ஏதேனும் ஒரு நிகழ்ச்சியை எத்தனை நாட்கள், மாதங்கள், வருடங்கள் கழித்து மறு  ஒளிபரப்பு செய்தாலும் தவற விடாமல் பார்க்கும் ரசிகர்கள் இன்றளவும் உள்ளனர். அந்த வகையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சீரியல்கள் படப்பிடிப்பு எதுவும் நடக்கவில்லை. இதனால் டிவி சேனல்கள் தங்களின் பழைய சூப்பர் ஹிட் சீரியல்கள், நிகழ்ச்சிகளை மீண்டும் ஒளிபரப்பு செய்தனர். இதனால் வீட்டில் முடங்கி கிடந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். டிஆர்பி ரேட்டிங் எகிறியது. 


இதனை கருத்தில் கொண்டு புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல்கள் மத்தியில் ஏற்கனவே ஹிட்டடித்த சீரியல்கள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனை கலைஞர் டிவி சேனல் முன்னெடுத்து செய்கிறது. ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி, தெய்வ மகள், நாதஸ்வரம், குல தெய்வம் ஆகிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த லிஸ்டில் மேலும் 3 சீரியல்கள் சேர்ந்துள்ளது. 


கோலங்கள்


90ஸ் கிட்ஸ் ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத சீரியலாக இருக்கும் கோலங்கள் செப்டம்பர்  4 ஆம் தேதி முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியலில் தேவயானி, அபிஷேக், நளினி, அஜய் கபூர், தீபா வெங்கட், சுபலேகா சுதாகர், மோஹன் ஷர்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கிட்டத்தட்ட 1533 எபிசோட்கள் இந்த சீரியல் ஒளிபரப்பானது. 






அழகு


சன் டிவியில் 2017 முதல்  2020 ஆம் ஆண்டு வரை  ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்  அழகி. இந்தத் தொடரை விஷன் டைம் நிறுவனம் தயாரிக்க  ரேவதி, தலைவாசல் விஜய், ஸ்ருதி ராஜ், ஐசுவரியா, காயத்ரி ஜெயராமன், பூவிலங்கு மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இனி இந்த சீரியல் கலைஞர் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். 


தென்றல் 


கோலங்கள் தொடருக்கு அடுத்ததாக 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது தென்றல் தொடர். தீபக், ஸ்ருதி ராஜ், ஹேமலதா, சாந்தி வில்லியம்ஸ், நிழல்கள் ரவி,சூசன் ஜார்ஜ் என பலரும் இந்த சீரியலில் நடித்திருந்தனர். இனி இந்த சீரியல் கலைஞர் டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.