சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Etir neechal) தொடரின் நேற்றைய எபிசோடில் வெண்பாவை பார்த்ததும் நந்தினி தன்னையும் அறியாமல் குழந்தையை கட்டிக்கொண்டு கதறி அழுகிறாள். அதை பார்த்த ஜீவானந்தம் என்ன நடந்தது? என புரியாமல் வருகிறார். அவரை பார்த்ததும் தாங்க முடியாமல் மண்டியிட்டு அவரிடம் மன்னிப்பு கேட்கிறாள் நந்தினி. 


"நீங்க அப்பத்தாவுக்கு உதவி செய்ய போய் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு இல்ல அது தான் ஃபீல் பண்ணி அழறாங்க" என ஜனனி சமாளிக்கிறாள். அதற்கு ஜீவானந்தம் "அப்பத்தாவுக்கு உதவி பண்ணது வேற, என்னோட மனைவியை கொலை பண்ணவங்க வேற. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" என நந்தினியை சமாதானம் செய்து அனைவரையும் உள்ளே வரச்சொல்கிறார் ஜீவானந்தம். 



அப்பத்தா இப்போது இங்கே இல்லை. ஆனால் அவர் அடுத்து வரும்போது மிகவும் உறுதியாகthதான் வருவார் அது மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும். பிறகு அப்பத்தா அவர்களுக்காக எடுக்கpபோகும் முடிவு பற்றியும் அதற்கு அவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் சொல்கிறார்.  


ஆதிரையிடம் கரிகாலன் வந்து ஹனிமூன் போவது பற்றி பேசி கடுப்பேத்துகிறான். வழக்கம் போல மரியாதை இல்லாமல் கரிகாலனை கத்துகிறாள் ஆதிரை. அதை கேட்டு விசாலாட்சி அம்மா "முதலில் மரியாதை இல்லாமல் பேசுவதை நிறுத்து" என்கிறார். கரிகாலன் விசாலாட்சி அம்மாவுக்கு நன்றி சொல்கிறார். அந்த நேரத்தில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த குணசேகரன் "என்ன ஒரே சத்தமா இருக்கு?" என்கிறார். "இந்த வீட்டு பொம்பளைங்களோட சேர்ந்துக்கிட்டு என்னை எதிர்த்து ஒரு அடி எடுத்து வைக்கலாம் என நெனச்சா அப்புறம் உனக்கு பொண்ணு இருக்க மாட்டா. சொல்லி வை" என அம்மாவிடம் சொல்லிவிட்டு செல்கிறார் குணசேகரன். 


"நீங்க இவ்வளவு அமைதியானவரா இருக்கீங்க பிறகு எதற்கு துப்பாக்கி எல்லாம் வைத்து இருக்கீங்க?" என நந்தினி ஜீvaaனந்தத்திடம் கேட்கிறாள் அதற்கு அவர் "நான் பிரச்சனையின் போது சமாளிப்பதற்காகவும், கூட்டத்தை அடக்கவும் வைத்து இருப்பேன் அதனால் யாருக்கும் எந்த ஒரு துன்புறுத்தலும் இருக்காது. ஒரு போராளி கையில் துப்பாக்கி இருப்பதற்கும் ஒரு சமூக விரோதியிடம் இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது " என்கிறார். 



"அப்போ உங்க மனைவியை சுட்டது யார் என உங்களுக்கு தெரிந்தால் நீங்க என்ன பண்ணுவீங்க?" என கேட்கிறாள் நந்தினி. "கண்டிப்பா கொன்றுவேன்" என்கிறார். அதை கேட்டு அப்படியே உறைந்து போகிறாள். அவள் அடுத்து வார்த்தை சொல்ல வரும்போது போன் அடிக்கிறது. அவளுடைய அப்பா வீட்டுக்கு வந்து இருப்பதாகவும் வீட்டுக்கு வெளியே இருப்பதாகவும் சொல்கிறார். நந்தினி நான் உடனே வருகிறேன் என சொல்லிவிட்டு ரேணுகாவுடன் வீட்டுக்கு செல்கிறாள். 


ஈஸ்வரியும் ஜனனியும் வெண்பாவோடு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது வெண்பா ஈஸ்வரியை பார்த்து "நீங்க என்னோட அம்மா மாதிரியே இருக்குறீங்க" என சொல்லவும் வெடித்து அழுகிறாள் ஈஸ்வரி. குழந்தை கட்டி அணைத்துக் கொள்கிறாள். அழக்கூடாது என குழந்தையை  சமாதானம் செய்து வைக்கிறாள். ஜீவானந்தம் ஜனனிக்கும்  ஈஸ்வரிக்கும் காபி கொடுக்கிறார். ஜனனி வெண்பாவை அழைத்துக்கொண்டு வீட்டை சுத்திகாட்ட சொல்கிறாள். 



ஜீவானந்தம் ஈஸ்வரியுடன் "என்னுடைய மனைவி கயல்விழி இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பாள். அவளுக்கு உங்களை போல மனிதர்களை சந்திப்பது மிகவும் பிடிக்கும். வெண்பாவையும் கயல்விழியையும் பாதுகாப்பாக வைத்து இருக்கிறேன் என நினைத்து காட்டுக்குள் வைத்தே இருந்து இப்போது இழந்து விட்டேன்" என சொல்லி வருத்தப்படுகிறார். பிறகு அப்பத்தாவின் எண்ணம் பற்றியும் அவர்கள் அனைவரும் எப்படி அந்த கூண்டில் இருந்து தைரியமாக வெளியே வந்து போராட வேண்டும் என அப்பத்தா நினைப்பது பற்றியும் சொல்கிறார். 


பிறகு ஈஸ்வரியும் ஜனனியும் அங்கிருந்து கிளம்புகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர் நீச்சல் (Etir neechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.