சன் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'வானத்தை போல'. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தொடர்ந்து டி. ஆர்.பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தை பிடித்து வரும் 'வானத்தை போல' சீரியலில் தற்போது பரபரப்பான கட்டம் ஒளிபரப்பாகி வருகிறது.

  


 



வானத்தை போல கார்த்தி :


'வானத்தை போல' சீரியலில் ஸ்ரீ, சாந்தினி, மகாநதி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் அஷ்வின் கார்த்தி. நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரபலமாக இருந்த நடிகர் அஷ்வின் கார்த்தி, விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நெகட்டிவ் ரோல்களில் நடித்து வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வானத்தை போல' சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். 


காதல் கனிந்தது :


நடிகர் அஷ்வின் கார்த்தியும், செலிபிரிட்டி மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரி குணசேகரனும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக  இருந்த காதல் ஜோடி ஏராளமான ரீல்ஸ்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வந்தனர். இந்த காதல் ஜோடிகள் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் சமீபத்தில்  நிச்சயதார்த்தம் நடைபெற்று அதன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 


 



திருமணம் முடிந்தது :


நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அஷ்வின் கார்த்தி - காயத்ரி குணசேகரன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமண விழாவில் உறவினர், நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். 'வானத்தை போல' செட் முழுவதும் அஷ்வின் திருமணத்தில் கலந்து கொண்டனர். 


அஷ்வின் இன்ஸ்டா போஸ்ட் :


நடிகர் அஷ்வின் கார்த்தி தனது திருமணம் குறித்தும் அவர்களின் திருமண புகைப்படங்களுடன் "இருவர் ஒன்றான தருணம்" என்ற குறிப்புடன்  சோசியல் மீடியாவில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அஷ்வினின் இந்த போஸ்டுக்கு அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள். 


அஷ்வினை தொடர்ந்து அரவிஷ் :


அஷ்வின் கார்த்தி - காயத்ரி குணசேகரன் திருமணம் ஒரு பக்கம் சின்னத்திரை ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க மற்றொரு சன் டிவி சீரியல் நடிகருக்கும் நேற்று கோலாகலமாக நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. 


 



கைகோர்த்த காதல் ஜோடி :


சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சுந்தரி சீரியலின் முதல் மற்றும் இரண்டாவது சீசனில் கிருஷ்ணா என முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் அரவிஷுக்கும், 'திருமகள்' சீரியல் கதாநாயகி நடிகை ஹரிகாவும் காதலித்து வந்தனர். அந்த வகையில் இருவரின் வீட்டார் சம்மத்துடன் கோலாகலமாக அவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த வைபவத்தில் பல சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் ஜோடிகளை வாழ்த்தினர். விரைவில் அரவிஷ் - ஹரிகா திருமணம் நடைபெற உள்ளது. சின்னத்திரை ரசிகர்கள் இந்த ஜோடிக்கு சோசியல் மீடியா மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.