சின்னத்திரை மூலம் பிரபலமான பல நடிகைகளில் ஒருவர் திவ்யா. சன் டிவியில் ஒளிபரப்பான மகராசி சீரியலில் பாரதி எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் கேளடி கண்மணி தொடரிலும் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது திவ்யா கன்னடம் சீரியல்களிலும் மற்றும் தமிழ் சீரியலான செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கும் சின்னத்திரை நடிகர் அர்னவிற்கும் திருமணம் நடைபெற்றது. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "செல்லம்மா" தொடரில் சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
காதல் முதல் கல்யாணம் வரை:
திவ்யா மற்றும் அர்னவ் இருவரும் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பான "கேளடி கண்மணி" தொடரில் இணைந்து நடித்துள்ளனர். அந்த சீரியலில் இருந்து திவ்யா சில காரணங்களால் வெளியேறினாலும் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதற்கு பிறகு இருவரும் இரண்டு வருடமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளனர். இருவரும் எளிமையான முறையில் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டனர். அதற்கு பிறகு திவ்யா இன்ஸ்டாகிராம் மூலம் தனது ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்துள்ளார்.
திவ்யாவின் அழுகைக்கு காரணம் என்ன?
இருவரும் திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அர்னவ் மற்றும் திவ்யா இடையில் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் அதிகமாகவே அர்னவ், திவ்யாவை தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்து அடிபட்டதால் திவ்யாவின் வயிற்றில் அடிபட்டுள்ளது. மேலும் காலால் அர்னவ் மிதித்ததால் திவ்யா மயங்கியுள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது அங்கு ஆர்னவ் இல்லாததால் அவரால் மருத்துவமனைக்கு கூட செல்ல இயலவில்லை என் தெரிவித்த திவ்யா மற்றுமொரு ஷாக்கிங் தகவலையும் கூறியுள்ளார். திவ்யாவிற்கு வயிறு வலி அதிகமாக இருந்துள்ளது அதனால் இரத்தகசிவு ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தன்னுடைய கரு எப்போது வேண்டுமானாலும் கலைந்து போக வாய்ப்பு இருப்பதாகவும், ஒருவேளை என்னுடைய கரு கலைந்து போனால் அதற்கு காரணம் எனது கணவர் அர்னவ் தான் என கதறி அழும் ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் . திவ்யா இது குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளார்.
மேலும் இந்த வீடியோவில் திவ்யா கூறுகையில் நாங்கள் இருவரும் ஒன்றாய் இருந்த காலத்தில் நாங்கள் வாங்கிய வீட்டின் லோன் முழுவதும் நான் தான் அடைத்தேன். மேலும் அர்னவ் வாங்கிய பர்சனல் லோன் இஎம்ஐ கூட நான் தான் கட்டினேன். அவருக்கு சீரியல் எதுவும் இல்லாத போதும் நான் தான் அவரை பார்த்து கொண்டேன் ஆனால் அதை எதையும் அவர் நினைத்து பார்க்கவில்லை. எல்லாமே அர்னவுக்காக தான் சகித்துக் கொண்டிருந்தேன். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.அவர் வேண்டும் எனக்கு என மிகவும் மனமுடைந்து பேசியுள்ளார் நடிகை திவ்யா.