பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவுடனான கல்யாணத்தை நிறுத்த கோபி குடும்பத்தினர் கல்யாண மண்டபத்துக்கு வரும் காட்சிகள் இன்று இடம் பெறுகிறது.
ரசிகர்களை கவரும் பாக்கியலட்சுமி
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.
கடந்த வாரங்களில் கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுத்தது, கோபி வீட்டை விட்டு வெளியேறியது, ராதிகா கோபியை திருமணம் செய்ய சம்மதித்தது, இருவரும் திருமணத்துக்கு தயாரானது, திருமணத்தை நிறுத்த கோபி குடும்பத்தினர் முயற்சிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.
உண்மையை சொன்ன ராமமூர்த்தி
வீட்டில் ஜெனி,ஈஸ்வரி, இனியா 3 பேரும் பேசிக்கொண்டிருக்க அவசரமாக வெளியே கிளம்பும் ராமமூர்த்தி ஏன் சீக்கிரமே எழுப்பி விடவில்லை என கடிந்து கொள்கிறார். அவரின் பதற்றத்தைப் பார்த்து என்னவென விசாரிக்க ஒன்றுமில்லை என சொல்கிறார்.தொடர்ந்து நைட்டு சாப்பிடல, காபி குடிச்சிட்டு போங்க என சொல்லி ஈஸ்வரி கொடுக்க அதனை தட்டி விடுகிறார். இதனால் டென்ஷனாகும் ஈஸ்வரி என்னன்னு இப்ப சொல்லப்போறீங்களா இல்லையா என கேட்க, கோபிக்கு இன்னைக்கு ராதிகா கூட கல்யாணம்...அங்க சமைக்கப் போனதே பாக்யா என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதைக்கேட்டு கோபமடையும் ஈஸ்வரி எப்படி இந்த கல்யாணம் நடக்குதுன்னு பார்க்கலாம் என சொல்லி ராமமூர்த்தி, இனியாவை கூட்டிக் கொண்டு மண்டபத்திற்கு செல்கிறார்.
பாக்யாவுக்காக வருத்தப்படும் செல்வி
இந்த பக்கம் கல்யாண மண்டபத்தில் சமையல் வேலையெல்லாம் முடிஞ்சி போச்சின்னு என நிம்மதி அடையும் பாக்யாவை நிறுத்தி செல்வி ஏன் இப்படி நடிக்கிற என கேட்கிறார். உனக்கு கொஞ்சம் கூட வருத்தமே இல்லையா...என செல்வி கேட்க, பாக்யா சமையல் பற்றி பேசி அதனை தவிர்க்க நினைக்கிறார். நீ ஒரு வார்த்தை சொல்லு நான் எதாவது கலாட்டா பண்ணி கல்யாணத்தை நிப்பாட்டுறேன்னு செல்வி சொல்ல, நீ எதுக்கு இவ்வளவு வருத்தப்படுற என பாக்யா கேட்க, இத்தனை வருஷமா கூடவே இருக்கேன். உன்னை இப்படி பார்க்க முடியல என அழுகிறார்.
ஜோராக நடக்கப்போகும் கல்யாணம்
மறுபுறம் ஜோராக கல்யாண மேடையில் கோபி,ராதிகா இருவரும் மந்திரங்கள் சொல்லி, மாலை மாற்றி திருமணம் செய்ய தயாராகின்றனர். கோபி தாலியை வாங்கி ராதிகா கழுத்தில் கட்டப்போக, ஈஸ்வரி, இனியா, ராமமூர்த்தி மண்டபத்துக்குள் வருவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.