சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ரேணுகா, ஈஸ்வரி மற்றும் நந்தினி மூவரும் கலங்கி இருக்கும் சூழலில் அவர்களுக்கு ஆதரவாக ஜனனி பேசுகிறாள். "நீங்கள் அனைவரும் இப்படி உடைந்து போவது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. குணசேகரனையும் கதிரையும் அடக்குவது நமது நோக்கமல்ல. அவர்களை தாண்டி முன்னேறி செல்வது தான் உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும். என்னை தயவு செய்து ஏமாற்றிவிடாதீர்கள்" என சொல்லிவிட்டு செல்கிறாள்.
அடுத்த நாள் காலை அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வருகிறார். குணசேகரன் போலீசை அடித்ததை யாரோ வீடியோ எடுத்து வைரலாக்கி உள்ளனர். ஜட்ஜே அந்த வீடியோவை பார்த்து இருக்கிறார். “அர்ரெஸ்ட் வாரண்ட் கொண்டு வந்து இருக்கேன்” என இன்ஸ்பெக்டர் சொல்ல கதிர் எகிறுகிறான். “ஏதோ மன்னிப்பு கேட்டால் விட்டுவிடலாம் என நினைத்தேன், ஆனா நீங்க அடங்க மாட்டிங்க” என சொல்லி குணசேரனை அழைத்து செய்கிறார் இன்ஸ்பெக்டர்.
பின்னாடியே கதிர், ஞானம் மற்றும் கரிகாலன் செல்கிறார்கள். "பழைய அண்ணனே இல்லை. முழுசா மாறி வந்து இருக்கார்" என பேசிகொண்டு செல்கிறார்கள். வக்கீலுக்கும் ஆடிட்டருக்கும் போன் செய்து போலீஸ் ஸ்டேஷன் வரச்சொல்கிறார்கள்.
வீட்டில் மருமகள்களை வீணாக வம்புக்கு இழுக்கிறார் விசாலாட்சி அம்மா. "முன்னாடி மாதிரி நக்கல் நையாண்டி எல்லாம் அவனிடம் செய்ய முடியாது. பாத்தீங்க இல்ல ஈஸ்வரி வாங்கினதா... " என சொல்ல "இதெல்லாம் ஒரு பெருமையா" என ஜனனி அவரை எதிர்த்து பேசுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோட் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வீட்டுக்கு ஜனனின் அப்பா வந்துள்ளார். அனைவரும் அவரை சுற்றி நிற்க அவரிடம் "என்ன அப்பா வீட்டுக்கு வந்து இருக்கீங்க திடீர்னு" எனக் கேட்கிறாள் ஜனனி. "எங்க வீட்ல முக்கியமான நிகழ்வு அது தான் சம்பந்தியை அழைக்கலாம் என வந்தேன்" என சொல்கிறார். அனைவரும் ஒன்றும் புரியாமல் பார்க்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற கதிர் ஞானத்திடம் "உங்க அண்ணன் இங்க இல்ல சார்" என வக்கீல் சொல்லவும் அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
வீட்டில் விசாலாட்சி அம்மா மருமகள்களை தரக்குறைவாக பேச எதிர்த்து பேசுகிறாள் ஈஸ்வரி "உங்க புள்ள பண்றது தான் முட்டாள்தனமா இருக்கு" என்கிறாள். அதற்கு எகிறி வந்த விசாலாட்சி அம்மா "என் புள்ள முட்டாள்னா அப்பா எவன்டி அறிவாளி? அந்த ஜீவனந்தமா?" என பேச ஈஸ்வரி அப்படியே அவரை பார்வையால் எறிகிறாள். விசாலாட்சி அம்மா இப்படி பேசுவார் என யாருமே எதிர்பார்க்காததால் அவரை அனைவரும் திட்டுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் ஹிண்ட்.