சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal)தொடரில் கடந்த வாரம் புதிய ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி என்ட்ரி கொடுத்த பிறகு வீட்டின் நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. இதுவரையில் துணிச்சலாக பேசி வந்த மருமகள்களுக்கு எல்லாம் ஆப்பு வைப்பது போல முரட்டுத்தனமான குணசேகரனாக வேல ராமமூர்த்தி கதாபாத்திரத்தின் குணாதிசயம் மாற்றப்பட்டு வருகிறது. அவரை பார்க்கும் போது வில்லனை பார்ப்பது போலவே இருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்து.
நேற்றைய எதிர்நீச்சல் எபிசோடில் அப்பத்தா மருமகள்கள் அனைவரையும் உட்கார வைத்து பேசி கொண்டு இருக்கிறார். "குணசேகரன் வேற ஏதோ பெரிய பிளான் செய்து தான் வந்து இருக்கிறான். என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் அவனுடைய அடுத்த டார்கெட் நான் தான். என்னுடைய 40 % ஷேரை எப்படி வாங்கலாம் என யோசித்து கொண்டே தான் இருப்பான். அதை எப்படி சமாளிக்கும் என்பது எனக்கு தெரியும்" என்கிறார் அப்பத்தா.
குழந்தைகள் அனைவரும் நீங்கள் எல்லாரும் இந்த வீட்டை விட்டு போங்க என சொல்லவும் "வீட்டை விட்டு போனாலும் நமக்கு வேறு வழியில் குடைச்சல் கொடுத்து கொண்டு தான் இருப்பார்கள். உங்களை வைத்து மிரட்டி எங்களை வர வைப்பார்கள். உங்களை எங்களுடன் அழைத்து சென்றால் அப்போது தான் என்னுடைய வாரிசு என பாசத்தை பொழிவார்கள். இங்கு இருந்தே போராடுவது தான் அதற்கு ஒரே வழி" என்கிறாள் ஈஸ்வரி.
கதிர் ஞானம் மற்றும் கரிகாலன் உட்கார்ந்து விசாலாட்சி அம்மாவின் சமையலை ஆஹா ஓஹோ என பாராட்டி கொண்டு இருக்க, அந்த நேரத்தில் நந்தினி மாடிக்கு வந்ததால் அவளை வீணா வம்புக்கு இழுத்து அசிங்கப்படுத்துகிறான் கதிர். அவளுக்கு சப்போர்ட்டாக வந்த ஈஸ்வரி ரேணுகாவையும் மரியாதை குறைவாக பேசுகிறான். "எங்களுக்கு மரியாதை கொடுப்பதே கிடையாது, அப்பத்தாவை ஏற்கனவே வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசிட்டே அடுத்து யார் உன்னோட அம்மாவையும் மரியாதை இல்லாம பேச போறீயா?" என ஈஸ்வரி கதிரிடம் கேட்கிறாள்.
கதிரின் பேச்சு ஓவராக போக நந்தினி எதிர்த்து பேச அவளை அறைந்து விடுகிறான் கதிர். இதை பார்த்த தாரா, கதிரை எதிர்த்து பேச அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அங்கிருந்து அனைவரும் கிளம்புகிறார்கள்.
நந்தினி அவர்களின் நிலையை நினைத்து வேதனைப்படுகிறாள். "நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாது. நாம் எதற்குமே லாக்கி இல்லை. எங்களை மன்னித்து விடு ஜனனி" என அவள் காலில் விழுந்து மன்னித்து கேட்கிறாள் நந்தினி. "நீ உன்னுடைய வாழ்க்கையை பார்த்துக் கொண்டு போயிருக்கலாம். இங்க வந்து இப்படி எங்களால கஷ்டப்பட்டு நிக்குற" என நந்தினி சொல்ல "நான் இது வரைக்கும் ஏமாந்ததா நினைக்கவே இல்லை. ஆனா இப்போ தான் நினைக்கிறேன். நீங்கள் இப்படி அவநம்பிக்கையுடன் பேசும்போது தான் நான் தோற்று விட்டதாக நினைக்கிறேன்" என்கிறாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
மருமகள்களிடம் விசாலாட்சி அம்மா பெரியவனை பற்றி பெருமையாக பேசுகிறார் "ஏய் முன்னால மாதிரி நீங்க அவன் கிட்ட நக்கலும் நையாண்டியும் பண்ணறது எல்லாம் இனிமே முடியாது. சிங்கம் போல வந்து இருக்கான். பாத்தீங்களா ஈஸ்வரி வாங்கினத" என்கிறார்.
வீட்டுக்கு போலீஸ் வருகிறது. கதிர் அவர்களை பார்த்து "வாங்கினது பத்தலயா?" என்கிறான். "வாங்கினதை டபிள் மடங்கா திருப்பி கொடுக்குறதுக்கு தான் வந்து இருக்கேன்" என்கிறார் இன்ஸ்பெக்டர். அவரை பார்த்து குணசேகரன் மிரட்ட "போன போகுது விட்டுட்டு போகலாம் என பார்த்தேன். அண்ணனும் தம்பிகளும் சேர்ந்துக்கிட்டு எகிறீங்களா... விடமாட்டேன் உங்கள" என சொல்லி குணசேகரன், கதிர் மற்றும் ஞானத்தையும் அரெஸ்ட் செய்து அழைத்து செல்கிறார்கள் போலீஸ்காரர்கள். அதை மொத்த குடும்பம் நின்று வேடிக்கை பார்த்து கொண்டு இறக்குகிறது.
இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)எபிசோடுக்கான ஹிண்ட்.