சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது. இது வரையில் ஜெயித்து வந்த குணசேகரன் முதல்முறையாக தர்ஷினி கல்யாண விவகாரத்தில் பெண்களிடம் தோற்று போகிறார். தம்பிகளும் குணசேகரனுக்கு எதிராக கிளம்ப மேலும் ஆவேசம் அடைந்த குணசேகரன் அவர்கள் வாழ்க்கையில் முன்னேறவே கூடாது, அவரின் காலை சுற்றியே கிடைக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.
ரேணுகா சமாதானம்:
அதில் முதல் படியாக ஞானம் துவங்கும் கருவாடு பிசினஸ் துவக்க விழா நடைபெறுகிறது. அது அனைத்துக்கும் காரணம் கரிகாலன் தான் என்ற உண்மை தெரிந்து அனைவரும் கொந்தளிக்கிறார்கள். அதிலும் திறப்பு விழாவுக்கு நடிகையை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளனர். ஞானம் தான் செய்வது தான் சரி என வீம்பு பிடிக்கிறான். எதுவும் பிரச்சினை செய்ய வேண்டாம் நல்ல படியாக திறந்து வைக்கலாம், பிறகு பார்த்து கொள்ளலாம் என அனைவரும் ரேணுகாவை சமாதானம் செய்து வைக்கிறார்கள்.
நடிகை வந்ததும் கரிகாலன் அடிக்கும் லூட்டியை பார்த்து அனைவரும் கடுப்பாகிறார்கள். பேசிய தொகையை முழுசாக கொடுக்கவில்லை என நடிகை கிளம்ப, நந்தினி நகையை கொடுத்து பணம் வாங்கி வரச் சொல்கிறாள். நடிகை விளக்கை ஏற்றவும் காரில் வந்தவர்கள் திறப்பு விழாவை நிறுத்த சொல்கிறார்கள். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் கதைக்களம்.
இன்றைய எதிர்நீச்சல் ப்ரோமோ:
ஞானம் துவங்கி இருக்கும் கருவாடு பிசினஸ் இடத்துக்கு போலீஸ் வந்து விழாவை நிறுத்த சொல்கிறது. அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். போலீசை பார்த்ததும் கரிகாலன் எஸ்கேப்பாகிறான். எதுவும் புரியாமல் என்ன விஷயம் என கதிர் போலீசிடம் கேட்க " இங்கு கொண்டு வந்த அத்தனையும் திருட்டு சரக்கு. அந்த கரிகாலன் ஒரு பிராட்" என போலீஸ் சொல்ல அதை கேட்டு அனைவரும் ஷாக்காகிறார்கள்.
ஞானம் அவனை விரட்டி பிடிக்க முயற்சி செய்ய கரிகாலனும் அவனது கூட்டாளியும் தலைகால் புரியாமல் தப்பித்து ஓடுகிறார்கள்.
குணசேகரன் விசாலாட்சி அம்மாவுக்கு போன் செய்து "உன்னோட மகனுங்க இன்னும் வீடு திரும்பலைனா போலீஸ் அவனுங்களை அள்ளிக்கிட்டு போயிருச்சு என அர்த்தம்" என சொல்ல விசாலாட்சி அம்மா பதட்டப்படுகிறார்.
ஏமாந்து போன ஞானம் விரக்தியில் தம்பிகளிடம் "நான் எங்காவது போறேன்" என் அழுதுகொண்டே கிளம்ப ரேணுகா ஞானம் கையை பிடித்து இழுத்து பளார் என கன்னத்தில் அறைகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.