Siragadikka Asai Serial Today Update :சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


விஜயாவுக்கு தொடர்ந்து லூஸ் மோஷன் ஆகி கொண்டே இருக்கின்றது. பின் எனர்ஜி இல்லாமல் மெத்தையில் சுருண்டு விழுந்து விடுகிறார். குடும்பத்தில் உள்ள அனைவரும் ஓடி வந்து "என்ன ஆச்சி" என்று கேட்கின்றனர். விஜயா மருந்து கலந்த ஜூஸ் குடித்ததால் ஏதாவது ஆகுமா என்று கேட்பதற்காக மீனா மருந்து கொடுத்தவரிடம் சென்று கேட்கிறார். அதற்கு அவர் அதெல்லாம் ஒன்னும் ஆகாது மீனா, வாந்தி வரும் வயித்த கலக்கும் அவ்ளோ தான் என்று சொல்கிறார். 


மீனா வீட்டுக்கு வருகிறார். "அவருக்கு ஆரஞ்சு ஜூஸ் போட்டு வச்சி இருந்தேன் அதை அத்தை எடுத்து குடிச்சிட்டாங்க" என்று சொல்கிறார். "அதுல நான் மருந்து கலந்து வச்சிருந்தேன்" என்று மீனா சொல்கிறார். அதற்கு விஜயா," அடிப்பாவி என்னடி மருந்து அது" என்று கேட்கிறார். முத்து குடிக்க கூடாது என்பதற்காக தெரிந்த அக்காவிடம் இருந்து மருந்து வாங்கி வந்து கலக்கி வைத்ததாக மீனா சொல்கிறார். 


"அப்போவே சொல்ல வேண்டியது தானே நீங்க பாட்டுக்கு எங்கேயோ கெளம்பி போய்ட்டிங்க" என்று ரோகிணி மீனாவிடம் கேட்கிறார். ”அறிவு இருக்கா உனக்கு, இப்டியா பண்ணுவா அவன் என்ன இன்னைக்கு தான் புதுசா குடிக்குறானா அதையும் சரக்குல மிக்ஸ் பண்ணி தான் அடிப்பான்” என்று மனோஜ் சொல்கிறார். ”கிச்சன்ல கலக்கி வச்சி இருந்ததை இவ ஏன் எடுத்து குடிக்குறா? அவ மேல எந்த தப்பும் இல்லை” என அண்ணாமலை சொல்கிறார். 


பின் முத்து மீனாவின் மடியில் படுத்துக் கொண்டு அழுகிறார். ”போ மீனா நான் குடிக்கல” என்று சொல்கிறார். மீனா விஜயாவுக்கு கஞ்சி செய்து எடுத்து வருகிறார். ”இவள நம்பி இந்த வீட்ல நான் ஒரு வாய் தண்ணி கூட குடிக்க மாட்டேன்” என்று விஜயா சொல்கிறார். பின் மீனா அவரே அந்த கஞ்சியை குடித்துக் காண்பிக்கிறார். 


முத்து ஸ்டேஷனுக்கு சென்று தான் குடிக்கவில்லை என கூறி தன் காரை கேட்கிறார். ஆனால் அவர்கள் முத்துவை கலாய்க்கிறார்கள். பின் முத்துவிடம் டீ உள்ளிட்டவைகளை வாங்கி வர சொல்லி வேலை வாங்குகின்றனர். முத்து அவர்கள் சொல்லும் வேலை எல்லாம் செய்கிறார். 


மீனா முத்து குடித்ததாக சொல்லப்படும் பாருக்கு சென்று, முத்து பாருக்கு சென்ற நாள் பாதிவான சிசிடிவி காட்சிகளை பார்க்கின்றார். அப்போது வீடியோவில் சிட்டி இருப்பதை மீனா பார்த்து விடுகிறார். பின் ”அண்ணே இவன் ஒரு பொறுக்கிண்ணே” என்று மீனா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.