Ethirneechal Serial Written Update: சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரின் இன்றைய எபிசோடுக்கான (மே.02) ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
நந்தினியின் அப்பா மொய் விருந்து வைத்து தாராவுக்கு காது குத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக சொல்ல, குணசேகரன் அவரை அசிங்கப்படுத்தி பேசுகிறார். அப்போது நந்தினி மொய் விருந்து எல்லாம் தேவை இல்லை. ஜனனி லோனுக்கு ஏற்பாடு செய்து இருப்பதாக சொல்கிறாள்.
அதைக் கேட்ட குணசேகரன் "என்ன வேணும்னாலும் செய்யுங்க, ஆனால் இந்த குணசேகரன் பெயர் வெளியில் வரக்கூடாது" என ரூல்ஸ் போடுகிறார். ஞானம் தொழில் விஷயமாக ஒருவரை சந்திக்க வருகிறான். அப்போது அந்த இடத்தில் பலரும் அந்த நபரை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். “கரிகாலன் பையன் உண்மையியேயே அதிர்ஷ்டசாலிப்பா. ஒரே மாதத்தில் பெரிய இடத்துக்கு போயிட்டான்பா" என பேசிக்கொள்கிறார்கள். ஞானம் காத்துகொண்டு இருக்கும் சமயத்தில் மாறுபட்ட கெட்டப்பில் மாஸாக வந்து என்ட்ரி கொடுக்கிறான் கரிகாலன். அவனைப் பார்த்து ஞானம் அதிர்ச்சி அடைகிறான். கரிகாலனும் 'ஞானம் மாமா நீங்களா?" என வந்து பேசுகிறான்.
நான்கு பெண்களும் லோன் விஷயமாக பேங்குக்கு போகிறார்கள். அங்கு மேனேஜரை பார்த்து பேசிக்கொண்டு இருக்கும் போது "நாளைக்கு ஒரு கேரண்டர் உடன் வந்து உங்களை சந்திக்கிறேன்" என ஜனனி சொல்ல, "யாரு குணசேகரன் சாரா? பேசாமல் அவரையே கையெழுத்து போட சொன்னா வேலை ஈஸியா முடிஞ்சுடும்" என மேனேஜர் சொல்ல, அதைப் பிடிக்காத நந்தினி எழுந்து விடுகிறாள். ஜனனிக்கு அதில் விருப்பம் இல்லாததால் அனைவரும் அங்கிருந்து வெளியில் வந்து விடுகிறார்கள். இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த அடி எப்படி எடுத்து வைப்பது என்பது குறித்துப் பேசுகிறார்கள். மசாலா பொடி செய்து வியாபாரம் செய்வது குறித்து பேசுகிறார்கள். பேங்க் லோன் எடுத்து செய்யலாம் என முடிவு செய்கிறார்கள்.
ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு போன் செய்து தர்ஷினி போட்டியில் கலந்து கொள்வது குறித்து கவுன்சில் முடிவு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சொல்கிறார். ஞானம் தன்னுடைய வியாபாரம் குறித்து யாரையோ சந்தித்து பேசுவது பற்றி போனில் பேசுகிறான். அவன் கிளம்பும்போது வேண்டுமென்றே குணசேகரன் அபசகுனமாக தும்புகிறார். அனைவரும் வெளியில் சென்று பேசுகிறார்கள்.
பணத்தை எடுத்துக் கொண்டு எங்கு செல்கிறான் என ரேணுகா கேட்க, ஞானம் கோபம் அடைகிறான். அனைவரையும் அமைதியாக இருக்க சொல்கிறான். "என்னுடைய போக்கில் விடுங்கள்" என சொல்லிவிட்டு செல்கிறான். அவர்களுக்கு நடக்கும் வாக்குவாதத்தை பார்த்து சந்தோஷம் அடைகிறார் குணசேகரன்.
பேங்க் லோன் விஷயமாக பேங்க் மேனேஜரை நேரில் சென்று பார்ப்பது குறித்து ஜனனி சொல்கிறாள். அந்த நேரத்தில் குணசேகரனுக்கும் நந்தினிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் ஈஸ்வரி மற்றும் நந்தினியின் அப்பா இருவரும் வருகிறார். தாராவுக்கு காதுகுத்து சடங்கு செய்ய வேண்டும் என வந்து சொல்கிறார். அதற்காக மொய் விருந்து வைத்து இந்தச் சடங்கை செய்வதாக சொல்கிறார். குணசேகரன் நந்தினியின் அப்பாவை அவமானப்படுத்துகிறார். இது தான் நேற்றைய எபிசோட் கதைக்களம்.