சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 27) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.



ஆள்மாறாட்டம் செய்து தர்ஷினி சித்தார்த் கல்யாணத்தை முடிக்க வேண்டும் என குணசேகரன் போட்ட திட்டம் எல்லாம் தலைகீழாக மாறிப்போனது. வீட்டு மருமகள்களிடம் தோற்று போய் அவமானத்தில் தலைகுனிந்து நிற்கிறார் குணசேகரன். "தர்ஷினி ஜீவானந்தம் கூட போய் சேர்ந்துட்டா. அவங்க இரண்டு பேரும் போட்டியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்களாம்" என ஜனனி, ரேணுகா மற்றும் நந்தினியிடம் ஈஸ்வரி சொல்ல, அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.


 




கதிர் நந்தினிக்கு போன் செய்து "போன காரியம் என்ன ஆனது?" எனக் கேட்க, நடந்ததை எல்லாம் நந்தினி சொல்ல கதிர் சந்தோஷப்படுகிறான். ஈஸ்வரி குணசேகரனிடம் ஆவேசமாகச் சென்று காரசாரமாக பேசுகிறாள். "இத்தனை வருஷம் குணசேகரன் என்கிற பொய் பிம்பத்துக்கு அடங்கி போய் வாழ்ந்துகிட்டு இருந்தோம். இனி எங்களுக்காக வாழப்போகிறோம்" என ஈஸ்வரி தைரியமாகப் பேச "இனி உங்களால எங்களை ஜெயிக்கவே முடியாது" என்கிறாள் ஜனனி. அவர்கள் பேசுவதைக் கேட்டு குணசேகரன் கோபத்தில் கொந்தளிக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.


 




நேற்றைய எபிசோடில் ஈஸ்வரியும் மற்றவர்களும் போலீசுடன் மண்டபத்துக்குள் வர, மணமேடையில் மாலையும் கழுத்துமாக ராமசாமியையும் கீர்த்தியையும் உட்கார வைத்து ட்ராமா ஆடுகிறார் குணசேகரன். பக்காவாக ஆதாரங்களை எல்லாம் தயார் செய்து வைத்து இந்த தில்லாலங்கடி வேலை பார்க்கிறார். 


தர்ஷினியிடம் போலீஸ் இந்தக் கல்யாணம் பற்றி விசாரிக்க, தர்ஷினியும் இல்லை எனத் தலையாட்ட, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நாச்சியப்பனையும்  ஜனனிக்கு எதிராகப் பேச வைத்து விடுகிறார். குணசேகரன் சொல்வதை உண்மை என நம்பி போலீசும் அங்கிருந்து சென்று விடுகிறார்கள். ஜனனி, ஈஸ்வரி எவ்வளவு கெஞ்சியும் போலீஸ் நம்பவில்லை. அதற்குள் மண்டபத்தின் கதவை மூடி வேக வேகமாக கல்யாண ஏற்பாடுகளை செய்கிறார் குணசேகரன்.

 

 



ஏணி போட்டு உள்ளே சென்று அடியாட்களை அடித்து கல்யாணத்தை நிறுத்துகிறார்கள் நான்கு பெண்களும். ஈஸ்வரி பத்திரகாளியாக மாறி குணசேகரனையே அடிக்கத் துணிகிறாள். அடிதடி கலவரம் என பிரச்சினை வெடிக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு நடுவில் ஜனனியின் அம்மா அஞ்சனாவை தயார் செய்து வேகவேகமாக அழைத்து வந்து மணமேடையில் நிறுத்த, சித்தார்த் அஞ்சனா கழுத்தில் தாலியைக் கட்டி விடுகிறான். அதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சித்தார்த்தை அடிக்க வந்த உமையாளை அஞ்சனா தடுத்துவிடுகிறாள். சித்தார்த்தும் தைரியமாக உமையாளை எதிர்த்துப் பேசுகிறான். இது தான் நேற்றைய எதிர்நீச்சல் கதைக்களம்.

அடுத்தடுத்து ஜெயித்து வந்த குணசேகரன், இப்போது பெண்களால் வீழ்த்தப்பட்டு தலைகுனிந்து நிற்கிறார். பெண்களும் அவரை எதிர்த்து சவால் விடுகிறார்கள். தர்ஷினி தன்னுடைய கனவைத் தேடி அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டாள். இதன் மூலம் எதிர்நீச்சல் (Ethirneechal)  சீரியலை முடிக்கப் போகிறார்களா அல்லது கதைக்களத்தை வேறுவிதமாக திருப்ப போகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இனி வரும் எபிசோட்களில் இதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.