Brinda Das : மகன் கிஷன் தாஸூக்கு பெருமிதம் பொங்க வாழ்த்து சொன்ன சின்னத்திரை நடிகை பிருந்தா தாஸ்!

Brinda Das: சன் டிவியின் ஆனந்தம் சீரியலில் அபிராமி எனும் வில்லியாக கலக்கி ஏராளமான ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகை பிருந்தா தாஸ் மகன் கிஷன் தாஸ் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி போஸ்ட் செய்துள்ளார்.

Continues below advertisement

 

Continues below advertisement

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் மிகவும் பரிச்சயமான ஒரு சாந்தமான முகம் கொண்டவர் நடிகை பிருந்தா தாஸ். ஒரு நடிகையாக மட்டுமின்றி நடன கலைஞர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், சினிமா தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமையாளராக விளங்கும் பிருந்தா தாஸுக்கு இன்று வரை அவரின் அடையாளமாக இருப்பது சன் டிவியில் ஒளிபரப்பான 'ஆனந்தம்' சீரியலில் அவர் வில்லியாக நடித்த அபிராமி கதாபாத்திரம் தான். வில்லிக்கு உரித்தான எந்த ஒரு குணாதிசயமும் இல்லாத ஒரு தோற்றம் என்றாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். பிருந்தா தாஸ் என்ற அவரின் இயற்பெயரே மறந்து போகும் அளவுக்கு அபிராமி பெயரே அவரின் அடையாளமாக மாறிப்போனது. சீரியல் மட்டுமின்றி ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

 

 

 

நடிப்பில் இருந்து விலகல் :

பல ஆண்டுகாலம் சினிமா, சின்னத்திரை, மெகா தொடர் என பிஸியாக இருந்து வந்த பிருந்தா தாஸ் நடிப்பில் இருந்து கொஞ்சம் விலகி பெண் இயக்குநர் என்ற வரிசையில் இணைந்தார். 'ஹாய் டா' என்ற படத்தை இயக்கினார். அதில் சில சின்னத்திரை நடிகர்களையும் நடிக்க வைத்தார்.  சினிமா, சின்னத்திரை பயணத்தில் இருந்து கொஞ்சம் விலகி கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரின் இந்த பயணமும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. 

 

வில்லிகளின் சாம்ராஜ்யம் :

இன்றும் அவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருந்தாலும் குறுகிய காலத்திற்குள் முடிவது போல நல்ல கதையாக அமைந்தால் நிச்சயமாக நடிப்பேன் என தெரிவித்துள்ளார். சினிமாவில் ஒரு சில படங்களில் வில்லிகள் ஆதிக்கம் செய்தாலும் பெரும்பாலும் வில்லன்கள் தான் உள்ளனர். ஆனால் சின்னத்திரையை பொறுத்தவரையில் வில்லிகளின் சாம்ராஜ்யம் தான் நடைபெற்று வருகிறது. அதில் பலரும் சிறப்பாக நடித்து வருகிறார்கள். 

 

 

மீடியாவில் கிஷன் தாஸ் :

பிருந்தா தாஸ் போல மகன் கிஷன் தாஸும் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். ஆங்கரிங், ஷார்ட் ஃபிலிம், விளம்பர படங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். 'முதல் நீ முடிவும் நீ' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான கிஷேன் தாஸுக்கு அந்த படம் நல்ல பாராட்டுகளை அப்படம் பெற்றுக் கொடுத்தது. ஆர்ஜே பாலாஜியுடன் சிங்கப்பூர் சலூன் படத்திலும் நடித்துள்ளார். 

 

அம்மா ஒரு பிரபலமான சின்னத்திரை நடிகை என்றாலும் அவரின் பெயரை மகன் எந்த ஒரு இடத்திலும் வாய்ப்புக்காக பயன்படுத்தியது கிடையாதாம். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் கிஷேன் தாஸ் 'மீட் அவர் மம்மீஸ்' என்ற ஷார்ட் ஃபிலிம் ஒன்றில் அம்மா மகன் இருவரும் சேர்ந்து  நடித்துள்ளனர். 

 

 

மகன் பிறந்தநாள் :

நடிகை பிருந்தா தாஸ் தன்னுடைய மகன் கிஷன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அன்பு நிறைந்த போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். "என்னுடைய பூ, கிக்கி, கேடிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அன்பு, அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றி என்றுமே உன் வாழ்க்கையில் நிறைந்திருக்க வாழ்த்துக்கள். லவ் யூ இன்ஃபினிட்டி கூகுள் பிளஸ் யூ ஆர் பெஸ்ட்" என மகனை மனதார வாழ்த்தி இருந்தார். 


மகனும் அம்மாவுக்கு "நன்றி அம்மா. வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை எதிர்த்து போராட நான் என்றும் உங்களுடன் இருப்பேன். லவ் யூ அம்மா" என ரிப்ளை செய்து இருந்தார் கிஷன் தாஸ். பிருந்தா தாஸ் இந்த போஸ்டுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. மீண்டும் நடிகை பிருந்தா தாஸ் சின்னத்திரையில் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது. 

Continues below advertisement