Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம். 


மீனா போலீஸ் ஸ்டேஷனில் ஒரு கான்ஸ்டபிள் இடம் "நான் பூ கொடுக்க போய் இருந்தேன் மேடம் வண்டிய எடுத்துட்டு போயிட்டாங்க. உள்ள பூவெல்லாம் அப்டியே இருக்கு மேடம்" என்று சொல்கிறார். அதற்கு அவர், "சும்மலாம் வண்டிய எடுத்துட்டு வர மாட்டாங்கமா,  எஸ்.ஐ வரணும்" என்று  சொல்கிறார். ரோகிணி, மனோஜ், ஜீவா ஆகியோர் மீனா இருக்கும் அதே போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். 


”ஒருத்தர நம்ப வச்சி ஏமாத்தி இருக்க” என்று ரோகிணி சொல்கிறார். அதற்கு ஜீவா ”சார், நான் யாரையும் ஏமாத்தல சார்” என்று சொல்கிறார். மீனா முத்துவுக்கு கால் பண்ணி ஸ்கூட்டியை போலீஸ் எடுத்துச் சென்றது குறித்து சொல்கிறார். “எனக்கு என்ன செய்யுறதுனே தெரியலைங்க” என்கிறார். ”உன்னை யாரு வண்டிய அங்க விட சொன்னது” என்று முத்து கேட்கிறார். ”சரி நீ அங்கேயே இரு நான் வந்துடுறேன்” என்று முத்து சொல்கிறார். 


மனோஜும், ரோகிணியும் ஜீவாவுடன் சண்டை போடுகின்றனர். ”வாங்க எதுக்கு இப்டி கத்திக்கிட்டு இருக்கிங்க. அப்றம் நான் எதுக்கு இருக்கேன்” என்று போலீஸ் கேட்கிறார். முத்து போலீஸ் ஸ்டேஷன் வந்து ”எதுக்கு நோ பார்க்கிங்ல வண்டிய நிறுத்தின என்று மீனாவிடம் கேட்கிறார். முத்து போலீஸிடம் சென்று பேசுகிறார். ”ஃபைன் கட்டனும் இல்லனா கோர்ட்ல போய் வாங்கிக்கணும்” என்று போலீஸ் சொல்கிறார். 


”வண்டிய வாங்கிட்டே போலாம் நீ எதுக்கும் டென்ஷன் ஆகாத” என்று முத்து சொல்கிறார். ”எவிடன்ஸோட இவ மனோஜை ஏமாத்தினானு ஃப்ரூஃப் பண்ணி நாங்க இந்த காச வாங்கிக்குறோம்” என்று ரோகிணி சொல்கிறார். ”இப்போ விட்டா இவ மொத்தமா தப்பிச்சி போய்டுவா சார்” என்று மனோஜ் சொல்கிறார். ”நான் இவரு கூட வாழ்ந்து இருக்கேன். அதுக்கு இந்த பணம் சரியா போச்சி” என்று ஜீவா சொல்கிறார். முத்துவுக்கு தெரிஞ்ச ஒரு போலீஸ் வந்து நான் பேசுறேன் ”நீங்க ஃபைன் கட்டிட்டு வண்டிய எடுத்துட்டு போலாம்” என்று சொல்கிறார். 


”என்னாலலாம் பணத்தை கொடுக்க முடியாது. அவங்களால ஆனத பார்த்துக்க சொல்லுங்க” என்று ஜீவா சொல்கிறார். ”இது உனக்கு தான் பிரச்சனை. கேஸ் முடியுற வரைக்கும் இந்த நாட்டை விட்டு நீ வெளியே போக முடியாது” என்று போலீஸ் சொல்கிறார். ”அந்த பொண்ணுக்கு சொல்லி கொஞ்சம் புரிய வையுங்க” என்று போலீஸ் ஜீவாவின் வழக்கறிஞரிடம் சொல்கிறார். மீனாவும் முத்துவும் போலீஸ் ஸ்டேஷன் அருகே நின்று காபி குடித்துக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.