சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் குணசேகரன் அவசர அவசரமாக தர்ஷினி சித்தார்த் திருமணத்தை நடத்துவதற்காக அனைவரையும் மிரட்டி அடி பணிய வைக்கிறார். அவர்களும் வேறு வழியின்றி இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றாலும் அனைத்தையும் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

 

பெரும்பாடு பட்டு திருமணம் நடக்கும் இடத்திற்கு ஜனனியும் மற்ற மருமகள்களும் வருகிறார்கள். ஆனால் அவர்களை உள்ளே வரமுடியாதபடி கேட்டை பூட்டி வைத்து இடையூறு செய்கிறார். பெண்களும் விடாமுயற்சியுடன் கேட்டின் மேலே ஏறி உள்ளே வந்து விடுகிறார்கள். 

 

 


 

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

எப்படியோ தடைகள் அனைத்தையும் தாண்டி மண்டபத்துக்குள் நுழைந்த ஜனனிக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. போலீசும் அந்த நேரத்தில் வந்துவிடுகிறார்கள் மணமேடையில் தர்ஷினி சித்தார்த்துக்கு பதிலாக ராமசாமியும் கீர்த்தியும் மாலையும் கழுத்துமாக உட்கார்ந்து இருக்கிறார்கள். 

 

தர்ஷினியிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறார். "உனக்கு கல்யாண ஏற்பாடு நடக்குதா?" என தர்ஷினியிடம் கேட்கிறார். ஈஸ்வரியும் "சொல்லு தர்ஷினி" என சொல்ல, இல்லை என தலையை ஆட்டுகிறாள் தர்ஷினி. மேலும் அது அனைவருக்கும் அது அதிர்ச்சியைக் கொடுத்தது. இன்ஸ்பெக்டர் அதைக் கேட்டு ஜனனி தான் தவறாக ஒரு புகார் கொடுத்ததாக சொல்லி  அங்கிருந்து சென்று விடுகிறார்கள். 

 

 


 

இன்ஸ்பெக்டர் சென்றதும் மீண்டும் மாலை தர்ஷினி சித்தார்த் கழுத்துக்கு மாறுகிறது.  ஜனனி குணசேகரனைப் பார்த்து "உங்களுக்கு லாஸ்ட் வார்னிங் கொடுக்குறேன். இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க" என கோபமாக சொல்ல "அடிச்சு எல்லாரையும் இங்க இருந்து காலி பண்ணுங்க " என ஆர்டர் போடுகிறார் குணசேகரன்.

மண்டபத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு கலவரம் நடக்கிறது. ஈஸ்வரி ஆவேசமாக குணசேகரனை தாக்க முயற்சிக்கிறாள். அவளை கோபம் கொந்தளிக்கத் தடுக்கிறார் குணசேகரன். அதற்குள் சித்தார்த் தர்ஷினியின் கழுத்தில் தாலியை கட்டப் போகிறான். அதைப் பார்த்து ஷாக்கான நந்தினி "ஜனனி அங்க பாரு ஜனனி" என சொல்ல அனைவரின் கவனமும் அதிர்ச்சியுடன் மணமேடை மீது திரும்புகிறது. இதுதான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட். 

 


குணசேகரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடையும் அளவுக்கு என்ன நடந்தது? என்பது ஒரே சஸ்பென்சாக இருக்கிறது. இவ்வளவு பிரச்சினை நடக்கும்போது கூட தர்ஷினி போலீசிடம் உண்மையை சொல்லாதது ஏன்? அப்படி என்ன சொல்லி அவளை மிரட்டி வைத்திருக்கிறார் குணசேகரன்? சித்தார்த்தை திருமணம் செய்து கொண்டே தீருவேன் என உறுதியாக இருந்த அஞ்சனா என்ன ஆனாள்? ஸ்டேஷனில் இருக்கும் கதிர், சக்தி, ஞானம் என்ன ஆனார்கள்?  இப்படி பல கேள்விகள் அடுத்தடுத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இவை அனைத்துக்கும் வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.