Siragadikka Aasai Written Update April 26: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.


ட்ராவல் ஏஜென்சியிக்கு ஜீவா செல்கிறார். அப்போது அங்கு வேலை செய்பவர் மனோஜ் என்ற நபர் தங்களை வந்து விசாரித்ததாக சொல்கிறார்.  ”யாரு வந்து கேட்டாலும் என் டீடைல்ஸ் கொடுக்காதிங்க” என்று  ஜீவா சொல்கிறார். பின் ஜீவா பியூட்டி பார்லர் செல்லத் திட்டமிடுகிறார் ஆனால் அந்த பியூட்டி பார்லர் மூடி இருப்பதாக அவர் தோழி சொல்கிறார். இதனால் முத்து ”எனக்கு தெரிஞ்ச பார்லர் இருக்கு அங்க போகவா” என்று கேட்கிறார்.


அவரும் ஓகே சொல்கிறார். இதனையைடுத்து முத்து ஜீவாவை ரோகிணியின் பியூட்டி பார்லருக்கு அழைத்துச் செல்கிறார். ரோகிணி ஜீவாவை பார்த்ததும் ஷாக் ஆகிறார். பின் மனோஜூக்கு கால் செய்து ஜீவா வந்திருப்பதாக சொல்கிறார். மனோஜ் ”நீ புடிச்சி வை நான் வந்துடுறேன்” என்று சொல்கிறார். மீனா தனது வண்டியில் பூ கொண்டு சென்று விற்பனை செய்கிறார்.  இதற்கிடையே மனோஜ் பார்லருக்கு வந்து விடுகிறார். மனோஜைப் பார்த்து ஜீவா அதிர்ச்சி ஆகிறார்.


“உன்னை தாண்டி நாங்க தேடிக்கிட்டு இருந்தோம்” என்று ரோகிணி சொல்கிறார். மனோஜ் ஜீவாவைப் பார்த்து ”நீயெல்லாம் ஒரு பொண்ணா பணத்துக்காக என்னை நம்ப வச்சி ஏமாத்திட்ட இல்ல” என்று சொல்கிறார். ”மனோஜ் மாதிரி ஒரு இன்னசெண்ட்ட ஏமாத்த உனக்கு எப்டிடி மனசு வந்துச்சு” என்று ரோகிணி கேட்கிறார். ”இவன் இன்னசென்டா?” என்று ஜீவா கேட்கிறார். ”மனோஜ் போலீஸூக்கு கால் பண்ணு” என்று ரோகிணி சொல்கிறார்.


இதற்கிடையே மீனாவின் வண்டி நோ பார்க்கிங்கில் நின்றிருந்ததால் போலீஸ் அதை எடுத்துச் சென்று விடுகின்றனர். பின்னர் போலீஸ் பார்லருக்கு வருகின்றனர். போலீஸை பார்த்ததும் ”என்னை மிரட்டுறாங்க சார் ப்ளீஸ் என்னைக் காப்பாத்துங்க” என்று  ஜீவா சொல்கிறார். ”உன் மேல இவங்க ஆறு மாசத்துக்கு முன்னாடியே கம்ளைண்ட் கொடுத்து இருக்காங்க” என்று போலீஸ் சொல்கிறார்.  ”சார் நான் பணத்தை ஏமாத்துனதுக்கு இவங்ககிட்ட என்ன சார் எவிடன்ஸ் இருக்கு” என்று ஜீவா கேட்கிறார்.  ”மிரட்டி காசு கேட்குறாங்கனு போஸ்ட் போட்டேனு வச்சிக்கோங்க நீங்க எல்லாம் அவ்ளோ தான்” என்று ஜீவா சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.