சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் இன்றைய (ஏப்ரல் 23) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. பெண்கள் அனைவரும் தர்ஷினியை தீவிரமாகத் தேட, ஈஸ்வரிக்கு சற்று உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. அவளை அனைவரும் அமைதிப்படுத்தி ஜனனியும் நந்தினியும் தேடிச் செல்கிறார்கள். 

 

கரிகாலனை கழட்டி விட்டு வந்த கதை பற்றி ராமசாமி குணசேகரனிடம் சொல்கிறான். "வார்னிங் கொடுத்துட்டு தான் வந்து இருக்கோம்" என ராமசாமி சொல்ல "யாராலயும் பிரச்சினை வராது என நினச்சு விட்டுவிட வேண்டாம்" என சொல்கிறார் குணசேகரன். 

 

 


 

திருமண மண்டபத்தில் சித்தார்த்தை ராமசாமியும் கிருஷ்ணாசாமியும் தயார்படுத்தி அழைத்து வர, கீர்த்தி தர்ஷினியை அழைத்துச் செல்கிறாள். தர்ஷினியிடம் "உனக்கு இந்த கல்யாணம் ஓகேவா இல்லையா?" எனக் கேட்கறாள் கீர்த்தி. கீர்த்தி கேட்டதை பற்றி தர்ஷினி தீவிரமாக யோசிக்கிறாள். 

 

திருமணத்தை நடத்தி வைக்க சொல்லி ஒரு புரோகிதரை மிரட்டி வைத்துள்ளார் குணசேகரன். அவர் மனைவிக்கு போன் செய்து "திருட்டு கல்யாணம் ஒன்றில் வந்து மாட்டிக் கொண்டேன். உடனே தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வா" என சொல்கிறார். அதனால் புரோகிதரின் மனைவி ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்குகிறார். அப்போது கடைக்காரரிடம் கணவர் மாட்டிக் கொண்டதை பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். "எவனோ  போன் பண்ணி கூப்பிட்டான் என ஓடினார். அங்க போய் பார்த்தால் அது ஏதோ ரகசிய கல்யாணமாம்" என மாமி சொல்லி கொண்டு இருப்பதை ஜனனியும் நந்தினியும் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான கதைக்களம்.
  

 

 

 


 

நேற்றைய எபிசோடில் குணசேகரன் ஐயரை மிரட்டி இந்தக் கல்யாணத்தை இன்னும் இரண்டு மணி நேரத்தில் நடத்தியே தீர வேண்டும் என கண்டிஷன் போடுகிறார். ஜனனியும் மற்றவர்களும் கொன்றவையின் உதவியுடன் சென்று பெண் காவல் அதிகாரியிடம் தர்ஷினியின் கல்யாணம் பற்றி புகார் கொடுக்கிறார்கள்.  

ராமசாமியும் கிருஷ்ணசாமியும் கரிகாலனிடம் வம்பு செய்கிறார்கள். பேசிய பணத்தை கொடுக்க முடியாது என மிரட்டிவிட்டு செல்கிறார்கள். கரிகாலன் அவர்களை விடமாட்டேன் என சவால் விடுகிறான்.

 

 



குணசேகரன் தர்ஷினியை அழைத்துப் பேசுகிறார். அம்மா இல்லாமல் பொண்ணுக்கு கல்யாணம் செய்து வைப்பது முறையல்ல என குணசேகரன் மாமாவும், சித்தார்த்த அப்பாவும் சொல்ல அவர்களை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார் குணசேகரன்.

ஏதாவது ஒரு கோயிலில் போய் பார்க்கலாம் என நந்தினி சொல்கிறாள். "ஆதிரை திருமணத்தை ரோட்டில் வைத்து செய்தால் பிரச்சினையில் சிக்கினார். அதனால் அவர் இந்த முறை உஷாராக தான் செய்வார்" என ஜனனி சொல்கிறாள். அணைத்து மண்டபம் மற்றும் கோயில்களின் நம்பர்களுக்கு போன் செய்து பார்க்கலாம் என பிளான் பண்ணி கிளம்புகிறார்கள். ஜனனி ஒரு மண்டபத்துக்கு போன் செய்து விசாரிக்கிறாள். ஆனால் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.