Siragadikka Aasai Written Update: சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்.


ரோகிணியும் மனோஜும் ட்ராவல் ஏஜென்சியிடம் சென்று ஜீவாவின் பற்றிய விவரங்கள் குறித்து கேட்கின்றனர். ஆனால் அவர்கள் அதற்கு நிறைய நடைமுறைகள் இருப்பதாக கூறி தகவல்களை தர மறுக்கின்றனர். ”அச்சச்சோ  அந்த பணம் கிடைக்காதா? அவள எங்க போயி தேடுறது” என மனோஜ் ரோகிணியிடம் கேட்கிறார். ஜீவா முத்துவின் காரில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது முத்து ஜீவாவிடம் ”ஓ நீங்களும் கனடா தானா மேடம்” என கேட்கிறார். ”நீங்க எங்க போகணும்?” என மனோஜ் கேட்கிறார். ”ஹோட்டலுக்கு போகனும்” என்று ஜீவா சொல்லுகிறார்.


”நீங்க ரெண்டு பேரும் கெளம்புங்க” என்று ரோகிணி மனோஜிடம் சொல்கிறார் விஜயா. அதற்கு ரோகிணி ”எங்க ஆண்டி” என கேட்கிறார். ”உங்க அப்பா ஜெயிலில் இருந்து வருவதற்காக பூஜை பண்ணனும்” என்று விஜயா சொல்கிறார். மேலும் ரோகிணியை விரதம் இருக்க சொல்கிறார். ”நான் விரதம் இருக்கணுமா” என்று ரோகிணி கேட்கிறார். ரவி மற்றும் ஸ்ருதியையும் விஜயா கூப்பிட்டு கோயிலுக்கு செல்ல ரெடி ஆக சொல்கிறார். 


”விரதம் அதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கும். நீங்க இருந்துடுவிங்களா”? என ரவியும், மீனாவும் கேட்கின்றனர். ”ரோகிணி அப்பா மேல தப்பு இல்லணு லீகலா ப்ரூஃப் பண்ணாலே போதும் அதுக்கு ஏன் விரதம் இருக்கணும்” என்று ஸ்ருதி கேட்கிறார். அனைவரும் குடும்பத்தோட கோயிலுக்கு போய் வேண்டனும் என்று விஜயா சொல்கிறார். மீனா , முத்துவுக்கு கால் பண்ணி குடும்பத்தோட கோவிலுக்கு போகணும் என்று சொல்கிறார். ஜீவா முத்துவின் காரில் இருக்கிறார். போற வழியில தான் அந்த கோவில் இருக்கு என்று முத்து ஜீவாவிடம் சொல்கிறார். பராவாயில்ல கோயிலுக்கு போய்ட்டே ஹோட்டலுக்கு போகலாம் என்று ஜீவா சொல்கிறார். 


பின் அனைவரும் குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடுகின்றனர். ரோகிணி கோயிலுக்கு பூஜைக்கு வருவதால் மஞ்சள் புடைவையில் வருகிறார். அதை பார்த்து ஸ்ருதி ”என்னங்க காஸ்டியூம் இது” என்று கேட்கிறார். அப்போது ரோகிணியின் தலையில் தண்ணீரை ஊற்றி, அவருக்கு விபூதி எல்லாம் பூசி விடுகின்றனர். ரோகிணிக்கு நெடி தாங்க முடியாமல் புரை ஏறுகிறது. மேலும் ரோகிணியை தோப்பு கரணம் போடச் சொல்வதுடன், அங்கபிரட்சனம்மும் செய்ய வைக்கின்றனர்.  இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.