சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்.31)  எபிசோடில் கௌதம் ஆட்கள் கதிரைக் கட்டி வைத்து அடிக்க அந்த நேரத்தில் போலீஸ் வந்ததால் தலை தெறிக்க ஓடுகிறார்கள் கெளதம் கூட்டாளிகள். கதிரைப் பார்த்த போலீஸ் "நீ குணசேகரன் தம்பி" தானே எனத் தெரிந்து கொண்டு அவனுடைய கட்டை அவிழ்த்து விடச் சொல்கிறார். "பிறகு வந்து நான் புகார் கொடுக்கிறேன். இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும்" என சொல்லி விட்டு கதிர் அங்கிருந்து வேகவேகமாக கிளம்பி செல்கிறான்.



ஜான்சி ராணி குணசேகரனிடம் வந்து வத்தி வைத்து அவரை மேலும் ஏத்தி விடுகிறாள். "இந்த வீட்டில் உங்களுக்கு மரியாதை இல்லை என்பது தான் எனக்கு கவலையாக இருக்கிறது. இந்த வீட்ல பொண்ணு எடுத்த பாவத்துக்கு என்னை நாயை விட கேவலமாக நடத்துறாங்க" என அழுது புலம்ப, குணசேகரன் ஈஸ்வரியை அதட்டி கூப்பிடுகிறார். ஆனால் அப்பத்தா அங்கே வந்து என்ன விஷயம் என கேட்டு ஜான்சி ராணியை திட்டி விடுகிறார். "இந்த வீட்டில் திருவிழா முடியும் வரைக்கும் அசைவம் எல்லாம் சமைக்க முடியாது" என முகத்தில் அடித்தாற் போல சொல்லிவிடுகிறார்.



கதிர் கரிகாலனுக்கு போன் செய்து அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருகிறான். வளவன் கதிரைப் பிடித்து திட்ட எதையோ சொல்லி சமாளித்து விடுகிறான். கதிர் ஒரு பெண்ணை தேடி தான் போனான் என்பதை மோப்பம் பிடித்து அங்கே நடந்ததை அப்படி நேரில் பார்த்தது போல சொல்லவும் கதிர் முகமே மாறிவிடுகிறது.

அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கும் போது தர்ஷன் மட்டும் கோபமாக இருக்கிறான். ஈஸ்வரி போய் சமாதானம் செய்ய தர்ஷன் கோபமாக ஈஸ்வரியிடம் பேசுகிறான். "ஊர்ல அப்பாங்க எல்லாரும் எப்படி இருக்காங்க தெரியுமா? நீ சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் பொறுமையா இருக்கேன். அவங்க உன்னை நடத்துற விதம் எனக்கு பிடிக்கலை. நீ பொறுமையா இருக்கலாம் எங்களால் அப்படி இருக்க முடியாது. அப்பத்தா சொன்ன மாதிரி இந்த திருவிழா முடியுற வரைக்கும் தான் நான் பொறுமையா இருப்பேன். அப்பவும் அவர் மாறவில்லை என்றால் நாம் இந்த வீட்டை விட்டு போய்கிட்டே இருக்கணும். நீ எங்களுக்காக ஏதாவது செஞ்சு தான் ஆகவேண்டும்" என கண்டிஷனாக சொல்லிவிடுகிறான்.

கதிர் ரத்த காயங்களுடன் வந்ததைப் பார்க்கவும் குணசேகரனும் ஞானமும் அதிர்ச்சி அடைகிறார்கள். குணசேகரனிடம் தனியாக பேச வேண்டும் என கதிர் அழைத்து செல்கிறான்.


 




ஊர்க்காரர்கள் வந்து நந்தினியிடம் கதிர் அடிபட்டு வந்து இருப்பதைப் பற்றி சொல்லி போய் பார்க்க சொல்கிறார்கள். நந்தினியின் அப்பாவும் நந்தினியை போய் பார்க்க சொல்கிறார். ஆனால் நந்தினி அவரை திட்டி அனுப்பிவிடுகிறாள். "உயிரோட தானே வந்து இருக்கான். அப்புறம் என்ன?" என விரக்தியில் பேசுகிறாள் நந்தினி. "இது நம்ம நினைக்கிற மாதிரி இல்ல. இது வேற மாதிரி கூட இருக்கலாம். பெருசா ஏதோ நடக்க போகுது அது மட்டும் புரியுது" என ஈஸ்வரி சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல்  (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.