சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்டோபர் 21) எபிசோடில் கதிர் ஊருக்கு கிளம்புகிறான். அப்போது நந்தினி பொடி வைச்சு பேசவும் கரிகாலன் அவளை நக்கலடிக்கிறான். இதில் ஏதோ வில்லங்கம் இருக்கு என்பதை நந்தினியும் ரேணுகாவும் உணர்ந்து விடுகிறாள்.


 




ஒரு இடத்தில் போய் கதிரும் கரிகாலனும் இறங்கிவிட்டு வளவனை தேடுகிறார்கள். "அவன் பெயர் மட்டும் இல்ல ஆளே ஒரு தினுசா தான் இருப்பான். நீ இங்கேயே நில்லு நான் போய் அந்த கிறுக்கன் எங்கயாவது இருக்கானான்னு பார்த்துட்டு வரேன்" என சொல்லி கரிகாலனை அங்கேயே நிக்க வைத்துவிட்டு கதிர் சென்று தேடுகிறான்.

அப்போது அருகில் இருந்த கார் ஒன்றில் இருந்து வளவன் இறங்கி நிற்கிறான். அவரிடமே போய் லூசு கரிகாலன் மரியாதை இல்லாமல் விசாரிக்க துப்பாக்கியை எடுத்து கரிகாலன் தலைக்கு குறி வைத்து விடுகிறார் வளவன். கரிகாலன் அலறல் சத்தத்தை கேட்டு கதிர் ஓடிவந்து தடுத்து காப்பாற்றுகிறான். "நம்ம ஆளுயா இவன். நான் தான் சொன்னானே அந்த லூசு பய தான் இவன்" என்கிறான் கதிர்.

"இந்த கார்ல தான் உட்கார்ந்து இருந்த. அப்போ எங்களை பார்த்தவுடனே இறங்க வேண்டியது தானே" என கதிர் திட்ட "நான் போலீஸ்காரன் சூழ்நிலை பார்த்து தான் நான் இறங்குவேன்" என சொல்லி கதிரை காரை எடுக்க சொல்கிறான்.


 




வீட்டில் அனைவரும் ஊருக்கு கிளம்ப தயாராகிறார்கள். நந்தினி சக்தியிடம் சொல்லி அவனையே காரை ஓட்டிட்டு வர சொல்கிறாள். அவர்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்க ஜான்சி ராணி பையோடு வந்து "கிளம்புவோமா?" என கேட்கிறாள். நந்தினியும், ரேணுகாவும் "உன்னையெல்லாம் எங்களோட கூட்டிட்டு போக முடியாது" என சொல்கிறார்கள். உடனே விசாலாட்சி அம்மாவிடம் பஞ்சாயத்துக்கு போகிறாள் ஜான்சி ராணி. விசாலாட்சி அம்மாவை ஏத்திவிட்டு காரியத்தை சாதித்து கொள்கிறாள். "ஈஸ்வரிக்கு ஏதோ போன் வந்ததால் அவள் ரோட்டுக்கு பேசிக்கொண்டே போய்விட்டாள். போகும் போது அப்படியே கூட்டிட்டு போங்க" என்கிறார் விசாலாட்சி அம்மா.


 




ஈஸ்வரி யாருக்கோ போன் செய்து பார்க்கிறாள். மிகவும் சோகமாக எதையோ பறிகொடுத்தது போல நின்று கொண்டு இருக்கிறாள். அப்போது காரில் வந்து ஈஸ்வரியை அழைத்து செல்கிறார்கள். ஈஸ்வரி ஜீவானந்தம் பேசியதை நினைத்து வருத்தப்படுகிறாள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல்  (Ethirneechal) சீரியல் முடிவுக்கு வந்தது.