சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் வெண்பாவை அழைத்து வந்து ரூமில் வைத்து இருப்பதை மோப்பம் பிடித்த ஜான்சி ராணி உள்ளே நுழைந்து வேவு பார்க்க, அவளுக்கு யாரும் சரியாக பதில் சொல்லாததால் விசாலாட்சி அம்மாவை அழைத்து வந்து விசாரிக்க வைக்கிறாள். ஆனால் தாரா எப்படியோ அவர்களை சாமர்த்தியமாக சமாளித்து அனுப்பி வைக்கிறாள்.


 





அனைவைரையும் சாப்பிட அழைப்பதற்காக நந்தினி செல்கிறாள். அப்போது வளவனுடன் குணசேகரனும் கதிரும் தோட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த நந்தினி "யார் இந்த புது ஆள்? இங்க நின்னுகிட்டு என்ன பேசிகிட்டு இருக்காங்க" என சந்தேகத்துடன் பார்க்கிறாள். அவள் நின்று கொண்டு இருப்பதைப் பார்த்த கதிரும் குணசேகரனும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.


 




அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட் வெளியாகியுள்ளது.

கிள்ளிவளவன், குணசேகரன் மற்றும் கதிர் ஆக்ரோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது குணசேகரன் வளவனிடம் "யோவ் கிள்ளி... அவன் சரியுறத பார்த்து என் பொண்டாட்டிகாரி கதறி கதறி அழுகணும் ஆமா" என சொல்கிறார். "நீ நினைக்குற எல்லாமே நடக்கும்" என நம்பிக்கை கொடுக்கிறார் வளவன். அந்த நேரத்தில் தான் நந்தினி அங்கே வர அவர்கள் பேசுவதைக் கேட்டதால் அவளைப் பார்த்து முறைக்கிறார் குணசேகரன்.


 



ஆண்கள் அனைவரும் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். அந்த நேரத்தில் அப்பத்தா "நீங்க எல்லாரும் உட்கார்ந்து சாப்பிடுங்க" என ஆண்களுக்கு நேராக உட்கார்ந்து மருமகள்களை சாப்பிடச் சொல்கிறார். அதைப் பார்த்து கடுப்பான கதிர் "சும்மா இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் அதுங்க எல்லாத்தையும் கெடுத்து வைச்சு இருக்க" என அப்பத்தாவை திட்டுகிறான்.


"சமமா உட்கார்ந்து சாப்பிட்டா என்ன?" என அப்பத்தா திருப்பி கேட்க "கூடாது" என எகிறுகிறார் குணசேகரன்.  "எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு, கலாச்சாரம் இருக்கு. இங்க புதுசா யாரும் ஒன்னும் செஞ்சுட முடியாது" என குணசேகரன் சொல்ல "பாக்கலாமா?" என சவால் விடுகிறார் அப்பத்தா. "இங்க யார் அடங்குறா பார்த்துவிடுவோம்" என பதிலுக்கு அப்பத்தாவிடம் குணசேகரன் சவால் விடுகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.




திருவிழாவை வைத்து ஒரு பரபரப்புடன் கதையை நகர்த்தி வருகிறார்கள். இந்த சமயத்தில் ஒரு வாரமாக ஜீவானந்தம் காட்சிகள் எதுவும் வராததால் இதில் ஏதாவது ட்விஸ்ட் இருக்குமோ என யூகிக்கிறார்கள் ரசிகர்கள். விரைவில் சம்பவம் ஒன்று எதிர்நீச்சலில் நடக்கவிருக்கிறது. அது யாருடையதாக இருக்கும் என்பது தான் சஸ்பென்ஸ்.