சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஈஸ்வரி வேலை செய்யும் காலேஜுக்கு சென்று அவரை அவமானப்படுத்தி வேலையை விட வைத்த குணசேகரன் மீது கடுங்கோபத்தில் இருந்த ஜனனி வீட்டுக்கு வந்ததும் அவரிடம் பயங்கரமாக பேசுகிறார். எங்களை முடக்கிவிட்டோம் என நினைக்கவேண்டாம் இனிமேல் தான் நாங்கள் மிகவும் வேகமாக செயல்படுவோம் என சவால் எல்லாம் விடுகிறாள் ஜனனி. ஆனால் அவளை கேவலப்படுத்தி குணசேகரன் பேசுகிறார்.
பெரிய படிப்பு படிச்ச கிராமங்களில் இருக்கும் எத்தனையோ பொம்பளைங்க வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை உபசரிப்பது, குடும்பத்தை பார்ப்பது, வீட்டை சுத்தமாக வைத்து கொள்வது, குழந்தைகளை நன்றாக வளர்ப்பது இது மட்டும் தான் ஒரு பெண்ணுடைய வேலை. அதற்கும் மேல புருஷன்களை மதிக்க தெரிய வேண்டும். பணம் இருப்பதால் தான் நீங்கள் எல்லாம் இந்த ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கீறீர்கள். பணம் இல்லாமல் இருந்து பார்த்தால் தான் தெரியும் என ஜனனியிடம் பெண்களை மட்டுப்படுத்தி பேசுகிறார்.
எலெக்ஷனில் எஸ்.கே.ஆர் தன்னுடைய மனைவி சாருபாலாவை நிற்க வைக்க முடிவெடுத்துள்ளதாக குணசேகரன் ஆட்கள் வந்து கூறுகிறாரகள். அதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் சாருபாலாவை எதிர்த்து தன்னுடைய சார்பாக ஈஸ்வரியை கேண்டிடேட்டாக அறிவிக்க முடிவு எடுக்கிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
எலெக்ஷனில் ஈஸ்வரியை நிற்க வைப்பது குறித்து குணசேகரன் சொன்னதை நினைத்து பெண்கள் அனைவரும் யோசித்து கொண்டு இருக்கிறார்கள். என்ன முடிவு எடுப்பது என்பது தெரியாமல் கலக்கத்தில் ஈஸ்வரி இருக்க ஜனனி ஈஸ்வரியிடம் இந்த எலெக்ஷனில் நீங்க நிற்க வேண்டும் என அறிவுரை கூறுகிறார். அவள் சொல்லும் சில விஷயங்கள் அனைவரையும் யோசிக்க வைக்கிறது.
அடுத்த நாள் காலை அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து இருக்கும் போது "நீங்கள் தேவையில்லாமல் ஏத்தி விடுறீங்களோ என தோன்றுகிறது" என கூறுகிறான் கதிர். "பொம்பிளைகளை நிற்க வைத்து பின்னாடி நாம ஆடுற ஆட்டத்தை எல்லாம் ஆடிட வேண்டியது தான்" என அவனுக்கு குணசேகரன் புத்திமதி கூற அதை கேட்ட நந்தினியும் ரேணுகாவும் எரிச்சல் அடைகிறார்கள்.
ஜனனியும் ஈஸ்வரியும் அங்கே வர "ஈஸ்வரி வா போவோமா. நம்ம எலெக்ஷனில் நிற்கிறோம் என அறிக்கை குடுத்துட்டு வந்துருவோம்" என குணசேகரன் ஈஸ்வரியிடம் சொல்ல ஈஸ்வரி என்ன சொல்கிறாள் என்பது சஸ்பென்ஸ். அதை கேட்ட குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.