சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் அப்பத்தாவின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மரணத்தைப் பற்றி விசாரிப்பதற்காக சக்தியும் ஜனனியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் விசாரிக்கிறார்கள். சம்பவம் நடந்த இடம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு அந்த இடத்திற்கு செல்கிறார்கள்.

ஈஸ்வரி ஜீவானந்தத்தை சந்திப்பதற்காக செல்கிறாள். ஆனால் ஜீவானந்தம் அவரின் வீட்டில் இல்லை. அங்கு இருந்த ஃபர்ஹானாவிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது ஜீவானந்தம் ஈஸ்வரிக்கு வேறு ஒரு நம்பரில் இருந்து போன் செய்கிறார். "நான் அனுப்பும் லொகேஷனுக்கு உடனடியாக வாங்க" என சொல்லி ஃபர்ஹானாவையும் அழைத்து வர சொல்கிறார். இருவரும் கிளம்பி ஜீவானந்தம் சொன்ன இடத்திற்கு செல்கிறார்கள்.




 
வீட்டில் ரேணுகாவும் நந்தினியும் அப்பத்தாவை பற்றி நினைத்து கதறி கதறி அழுகிறார்கள். ஜீவானந்தம் மீது பழியை போட்டு விடுவார் குணசேகரன் என்றும், அதன் பிறகு வெண்பா அனாதையாகி விடுவாள் என்பதையும் நினைத்து மிகவும் மனது வேதனைப்பட்டு அழுகிறார்கள். அப்பத்தா பேசியதை எல்லாம் நினைத்து பார்த்து இந்த சம்பவம் நடந்தது அனைத்தும் பொய்யாக இருக்க கூடாதா, அப்பத்தா வந்து நேரில் நிற்க கூடாதா என ஆதங்கத்துடன் கதறுகிறார்கள்.

சக்தியும் ஜனனியும் அப்பத்தா காருடன் வெடித்து சிதறிய ஸ்பாட்டிற்கு வருகிறார்கள். அங்கே சிதறி கிடப்பதைப் பார்த்து வெடித்து அழுகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் விபத்து எப்படி நடந்தது என்பதைப் பற்றி அவர்களிடம் சொல்கிறார். ஜனனியால் இந்த துக்கத்தை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இப்படி குணசேகரனிடம் ஏமாந்து விட்டோமே என சக்தியுடன் சொல்லி அழுகிறாள் ஜனனி. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வீட்டில் விசாலாட்சி அம்மா வந்து அப்பத்தாவை காணவில்லையே எனக் கேட்க "போயிருச்சாம். உங்க பிள்ளைங்க எல்லாம் மொத்தமா கொண்டு போய் சேர்ந்துட்டாங்க" என ரேணுகா அழுதுகொண்டே சொல்ல விசாலாட்சி அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.


 



ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் "குணசேகரன் செஞ்ச தப்ப வெளியில கொண்டு வர நம்மகிட்ட எந்த ஆதாரமும் இல்லை" என சொல்கிறார். அதைக் கேட்டு ஈஸ்வரி கதறி அழுகிறாள். அந்த நேரம் ஜீவானந்தத்தை கைது செய்வதற்காக போலீஸ் வருகிறார்கள். வெண்பாவை ஈஸ்வரியிடம் ஒப்படைத்து விட்டு ஜீவானந்தம் செல்கிறார்.


 





அப்பத்தா கட்டியிருந்த புடவையை போலீஸ் ஜனனியிடம் கொடுக்க அதைப் பார்த்து அழுத ஜனனி "குணசேகரனை விடவே மாட்டேன் அப்பத்தா" என சபதமிடுகிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான  ஹிண்ட்.