சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் எப்படியோ போலீசை சமாளித்து ஊருக்கு வந்து சேர்கிறான். ஆனால் அவனை ரத்தக் காயங்களுடன் பார்த்த குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். கதிர் தனியாக பேச வேண்டும் என குணசேகரனை அழைத்து சென்று விடுகிறான்.



கணவன் அடிபட்டு வந்து இருப்பதை ஊர்க்காரர்கள் வந்து நந்தினியிடம் சொல்லியும் நந்தினி கண்டுகொள்ளாமல் இருக்கிறாள். "நம்ம கிட்ட வாயை கொடுப்பது போல எங்காவது போய் பேசி இருப்பான். அவங்க நல்லா மிதிச்சி அனுப்பி இருப்பாங்க" என நந்தினி சொல்ல "இது நம்ம நினைக்குற மாதிரி இருக்காது. வேற மாதிரி இருக்கும் எனத் தோணுது. என்னனு சொல்ல தெரியல ஆனா பெருசா ஏதோ நடக்கபோகுது என்பது மட்டும் புரிகிறது" என்கிறாள் ஈஸ்வரி. அதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.


 




அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அப்பத்தா ஈஸ்வரியிடம் வந்து "ஜீவானந்தத்தை இந்த பங்ஷனுக்கு வர சொல்லி இன்வைட் பண்ணி இருந்தேன். ஆனா இதுவரைக்கும் வரவும் இல்லை போனும் ஆஃப்ன்னு வருது. என்ன ஆச்சுன்னு தெரியல. உனக்கு ஏதாவது தெரியுமா?" என ஈஸ்வரியிடம் கேட்க பதறிப்போன ஈஸ்வரி "இல்லை எனக்கு எதுவும் தெரியாது" என்கிறாள். ஈஸ்வரி முகத்தில் மட்டுமில்லாமல் அனைவரின் முகமும் பதட்டத்துடன் இருக்கிறது.


 



குணசேகரன் கதிரிடம் எப்படி அடிபட்டது எனக் கேட்டுக்கொண்டு இருக்கிறார். அப்போது கதிர் கெளதம் தன்னை கடத்தி வைத்து அடித்தது பற்றி சொல்கிறான். அந்த நேரத்தில் "இந்த கெளதம் பய இவரை கடத்தினது தானே உங்களுக்கு தெரியும். இவர் எப்படி அங்க போனாருன்னு உங்களுக்கு தெரியுமா" என கரிகாலன் கதிரை குணசேகரனிடம் போட்டு கொடுக்க கதிர் கரிகாலனை அடக்குகிறான். குணசேகரன் முறைத்து பார்க்கிறார்.

ஈஸ்வரிக்கு ஒரு போன் வரவே சக்தி போனை கொண்டு வந்து ஈஸ்வரியிடம் கொடுக்கிறான். போன் செய்து இருப்பது ஃபர்ஹானா. "நான் உங்க வீட்டு வாசலில் தான் இருக்கேன். நீங்க கொஞ்சம் வெளியே வர முடியுமா?" என ஃபர்ஹானா கேட்க ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனி பதறி போய் போக அவர்களை பின் தொடர்ந்து வருகிறாள் ஜான்சி ராணி.


 




ஃபர்ஹானா கார் உள்ளே யாரோ இருப்பதை ஈஸ்வரியிடம் காட்ட, ஈஸ்வரியும் ஜன்னல் வழியாக பார்க்கிறாள். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஜான்சி ராணி மறைந்திருந்து பார்க்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.