ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மலர் எழுதி போட்ட லெட்டர் எல்லாரிடமும் சென்று கடைசியாக பரமேஸ்வரி பாட்டி கைக்கு வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது, ஒவ்வொருத்தராக தோட்டத்துக்கு வர தொடங்க ஒருவரை பார்த்து ஒருவர் ஓடி ஒளிந்து கொள்ள இறுதியாக பரமேஸ்வரி பாட்டி அங்கு வந்து "யாருடா முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னது வெளியே வாடா" என்று மிரட்ட, எல்லாரும் வெளிய வர "மொத்தமாக இங்க தான் கூடி இருக்கீங்களா? எல்லாம் ஆட்டம் போட வந்தீங்க, ஆரம்பிங்க" என்று அனுமதி கொடுக்க எல்லாரும் சேர்ந்து ஆட்டம் போடுகின்றனர்.
அடுத்து தீபா மீனாட்சியிடம் பாட்டுப் போட்டி பற்றி பேசி புலம்பி கொண்டிருக்க மீனாட்சி “பாடுனா கார்த்திக்கு உண்மை தெரிந்து விடும், பாடலானா அபிராமி கிட்ட கெட்ட பெயர் வரும், என்ன செய்தாலும் பிரச்சனை தான். சரி விடு பார்த்துக்கலாம்” என்று ஆறுதல் சொல்கிறாள்.
மறுநாள் பாட்டு போட்டிக்காக சபையில் எல்லாரும் கூடியிருக்க தீபா தயக்கத்துடன் இருக்க அபிராமி, “இவ என்ன பண்ண போறான்னு தெரியலையே” என்று பாத்திரத்தில் இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய கார்த்திகை தீபம் எபிசோட் நிறைவடைகிறது.