சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்துப் பார்க்கலாம்:


ரவிக்கும், ஸ்ருதிக்கும் சண்டையா?


விஜயா ஸ்ருதியிடம் ”உனக்கும் ரவிக்கும் சண்டையா?” என கேட்கிறார். ”உங்களுக்கும் அங்கிளுக்கு எதுவும் ஆர்கியூமெண்ட் வராதா என்ன” என கேட்கிறார். பின் ஸ்ருதி சென்று விட ரவி வருகிறார். ரவியிடம் ”உனக்கும் ஸ்ருதிக்கும் சண்டையா?” என விஜயா கேட்கிறார். அதற்குள் ஸ்ருதி ரவியை கூப்பிட்டு ஈவினிங் பிக்கப் பண்ண வந்துடு பை என சொல்லிவிட்டு செல்கிறார். 


”இந்த பொண்ண நெனச்சாலே எனக்கு கொஞ்சம் பக்குணுதாங்க இருக்கு. பணக்கார வீட்டு பசங்களாம் இப்டிதான் இருப்பாங்களோ” என சொல்கிறார் விஜயா. ”மாமியாரா மாறாம இருந்தா சந்தோஷமா இருக்கலாம்” என அண்ணாமலை சொல்கிறார். மாலை கட்டுவதற்காக மீனா  கூப்பிட்ட அனைவரும் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கின்றனர். 


விஜயாவுடன் சண்டை:


”எதுக்கு இங்க நிக்கிறிங்க” என அவர்களிடம் கேட்கிறார் விஜயா. ”மீனா தான் வேலைக்கு வர சொன்னா” என சொல்கின்றனர். ”அவளே ஒரு வேலைக்காரி அவ உங்கள வேலைக்கு வர சொன்னாளா?” என கேட்கிறார் விஜயா. உடனே வேலைக்கு வந்த அனைவரும் மீனாவுக்கு ஆதரவாக விஜயாவுடன் சண்டைப் போடுகின்றனர். ”வீட்டுக்கு வந்த மருமகள இப்படி தான் பேசுவிங்களா?” என ஒருவர் கேட்கிறார். ”இது மட்டும் முத்து தம்பிக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா?’ என கேட்கின்றனர். அவர்கள் கேள்வி கேட்பதை பார்த்து விஜயா மிரண்டு போய் நிற்கின்றார்.


மனோஜின் பார்க் ஃப்ரண்ட் மனோஜை ரோட்டில் பார்த்து உங்க ஒய்ஃப் பணத்தை கொடுத்து விட்டதாக சொல்கிறார். ”உனக்கு நல்ல வேலை கிடைக்கலனாலும் நல்ல ஒய்ஃப் கிடச்சி இருக்காங்க. அந்த வகையில நீங்க லக்கி தான் ப்ரோ” என சொல்லிட்டு செல்கிறார். இதனையடுத்து வீட்டுக்கு வரும் மனோஜ் ரோகினியிடம் அன்பாக பேசுகிறார். ”இனிமே உன்கிட்ட நான் எதையும் மறைக்க மாட்டேன்” என சொல்கிறார் மனோஜ்.


2 லட்சம்:


மீனா வீட்டுக்கு வருகிறார். பின் அனைவரும் வீட்டுக்குள் உட்கார்ந்து மாலை கட்டுகின்றனர். அப்போது அண்ணாமலை மனோஜியையும் வேலை செய்ய சொல்கின்றார். ”மொத்தம் 500 மாலைமா இரண்டு லட்ச ரூபாய் வரும்” என்கிறார் மனோஜ். இப்படி வந்த இந்த பூ கட்டுறவள கையில பிடிக்க முடியாதேடா என்கிறார் விஜயா. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.