சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் மீண்டும் தலைதூக்குகிறது தர்ஷினி கல்யாணம். கரிகாலனை விரட்டிவிட்டு குணசேகரன் தர்ஷினியை உமையாள் மகன் சித்தார்த்துக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வேலைகளை செய்து வருகிறார். சித்தார்த்தும் அஞ்சனாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள் என்பது தெரிந்தும் இந்த சம்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தைகள் தொடர்கிறது. அந்த வகையில் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. குணசேகரன் வீட்டுக்கு வந்த உமையாளிடம் குணசேகரன் சத்தியம் செய்து கொடுக்கிறார். "இந்த கல்யாணம் நடக்கும் போது என்னோட சொத்து முழுக்க என்னோட மாப்பிள்ளை பேர்ல மாறிடும்... இது சத்தியம்" என உமையாளுக்கு சத்தியம் செய்கிறார். இதை கேட்டு ஈஸ்வரியும் மற்றவர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இத்தனை நாட்களாக தர்ஷினியை கடத்தி வைத்து கதைக்களத்தை மாதக்கணக்காக இழுத்தடித்தார்கள். இப்போது மீண்டும் தர்ஷினி கல்யாணத்தை வைத்து கொண்டு கதையை இழுக்கிறார்கள். அஞ்சனாவும் சித்தார்த்தும் காதலிக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்தும் குணசேகரன் திருமண ஏற்பாடுகளில் மும்மரம் காட்டுகிறார். இதற்கு எல்லாம் அசைந்து கொடுப்பாரா என்ன குணசேகரன்?