சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜன.08) எபிசோடில் குணசேகரன் ஜனனியின் அம்மாவிடம் “ஏதாவது பேசி ஜனனியின் அப்பாவை அழைத்து வர ஏற்பாடு செய்யலாமா? கிருஷ்ணசாமியும் ராமசாமியும் நல்ல பிள்ளைகள் அவர்களிடம் பேசிப் பார்க்கவா" என அக்கறை இருப்பது போல மிகவும் தன்மையாக பேசி  பாசாங்கு செய்கிறார்.

வீட்டுப் பெண்களை பார்த்து “இவர்கள் எல்லாம் ஆடிக்கிட்டு இருக்காளுங்க” என சொல்ல, கடுப்பான நந்தினி "நாங்க என்ன இப்போ ஆடிட்டோம். அப்ப கூட உங்களை விடவா ரொம்ப ஆடிட்டோம்" என எதிர்த்துப் பேச அவளை "ஏய் வாயை மூடுடி" என்கிறார் குணசேகரன்.


அதைப் பார்த்து டென்ஷனான கதிர் "அண்ணன். அப்படி பேசாதீங்க அண்ணன்" என கத்தி சொல்லவும் குணசேகரன் உட்பட அனைவரும் ஷாக்காகிறார்கள். "என்னை நீங்க என்னை வேணும்னாலும் சொல்லுங்க.. ஆனா அவளை வாடி போடின்னு பேசாதீங்க. உங்க பொண்டாட்டிய நீங்க அப்படி பேசுறது வேற" என கதிர் பேச, அனைவரும் அதிர்ச்சியில் பார்க்கிறார்கள். நந்தினி இதைக் கேட்டு சந்தோஷப்படுகிறாள். கதிரிடம் இருந்து இதை எதிர்பார்க்காத குணசேகரன் அங்கு இருந்து உள்ளே சென்று விடுகிறார்.


 




விசாலாட்சி அம்மா நந்தினியை வார்த்தையால் காயப்படுத்துகிறார். "பணிவிடை செய்கிறேன் என தலையணை மந்திரம் போட்டு குடும்பத்தை பிரிக்கப் பாக்கறியா?" என அவளை அவமானப்படுத்தி பேச, "நான் என்ன செய்தேன்" என நந்தினி கேட்க, "வேண்டாம் பேசாத நந்தினி. உள்ள போ" என பாசமாக கதிர் சொல்ல, பூரித்த நந்தினி "நான் இனிமேல் பேசமாட்டேன். அது தான் நீங்க சரியா பேச ஆரம்பிச்சுட்டீங்க இல்ல" என சொல்லி உள்ளே சென்று விடுகிறாள்.


குணசேகரன் கதிரிடம் சென்று பேசுகிறார். "நான் ஊருல பிறந்த வளர்ந்தவன். எனக்கு இந்த சிட்டில எப்படி பேசுவாங்களோ அது போல எல்லாம் பேச தெரியாது. ஆதிரையை எப்படி உரிமையோடு பேசுவேனோ அப்படி தான் நான் அவர்களையும் பார்க்குறேன். நான் ஏதாவது தப்பா பேசி இருந்தா என்னை மன்னிச்சிரு" என பெரிய டிராமா போடுகிறார் குணசேகரன். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.  

அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 9 ) எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கதிரிடம் குணசேகரன் பேசிக்கொண்டு இருக்கும்போது அங்கே நின்று கொண்டு இருந்த ஜான்சி ராணி மேலும் தூபம் போடுவது போல "நீ உனக்காக எங்க அண்ணன் வாழ்ந்து இருக்க. உன் தம்பிகளுக்காக மாடா உழைச்சு ஓடா தேஞ்சு போயிருக்க. ஆனா இவனுங்களுக்கு தான் இதெல்லாம் தெரிய மாட்டேங்குது" என சொல்ல, கடுப்பான கதிர் ஜான்சி ராணியை பார்த்து முறைக்கிறான்.



அடுத்த நாள் காலை விசாலாட்சியின் தம்பி வீட்டுக்கு வந்து இருக்கிறார். அவரிடம் குணசேகரன் "இந்த எலெக்சன்ல என்ன நடக்கும்?" எனக் கேட்கம் அவர் நல்லதே நடக்கும் என்கிறார். "யாருக்கு நல்லது நடக்கும்?" என ஞானம் கேட்க "நல்லவங்களுக்கு நல்லது நடக்கும்" என்கிறார் சாமியாடி. அதை கேட்டதும் ஈஸ்வரி முகத்தில் ஒரு புன்சிரிப்பு, குணசேகரன் முகத்தில் கடுங்கோபம்.


 




கரிகாலன் வாயை வைத்து சும்மா இருக்காமல் "எனக்கும் அந்த தர்ஷினி பிள்ளைக்கும் கல்யாணம் நடக்குமா நடக்காதா?" எனக் கேட்க போன ஈஸ்வரி "கரிகாலா இதை பத்தி நீ பேசக்கூடாதுன்னு நான் எத்தனை தடவை உன்கிட்ட சொல்லி இருக்கேனா இல்லையா? " எனக் கேட்க, அவளைப் பார்த்து முறைக்கிறான் கரிகாலன். நந்தினிக்கும் ரேணுகாவுக்கும் சிரிப்பாக வருகிறது. முறைத்து கொண்டே குணசேகரன் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.