சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 7) எபிசோடில் தர்ஷினியை கரிகாலனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறேன் என குணசேகரன் செய்து வைத்த சத்தியத்தையும், ஜான்சி ராணி விடாப்பிடியாக தர்ஷினியை வண்டியில் ஏற்ற முயற்சி செய்ததை நினைத்து தர்ஷனிடம் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். தர்ஷன் அவளை சமாதானம் செய்கிறான், ஆனாலும் தர்ஷினி அதை ஏற்க மறுக்கிறாள். பொறுமையாக இருப்பேன் ஆனால் ஏதாவது பிரச்சினை வந்தால் நான் என்னுடைய வாழ்க்கையை பார்த்து கொண்டு சென்று விடுவேன். இதை நீங்கள் யாருடன் யாரிடமும் சொல்ல கூடாது என ஐஸ்வர்யா, தாரா மற்றும் தர்ஷனிடம் சத்தியம் வாங்கிக் கொள்கிறாள்.
குணசேகரன் உடனே போலீஸ் ஸ்டேஷனில் வந்து சரண்டராக வேண்டும் இல்லைனா நான் அரெஸ்ட் வாரென்ட் வாங்கி அவரை கைது செய்துவிடுவேன் என இன்ஸ்பெக்டர் எகிறுகிறார். காருக்குள் பதுக்கி இருந்த குணசேகரன் பொம்பளைகளை விட்டுப் பிடிக்க வேண்டும் என சொல்கிறார்.
மெய்யப்பன் குரூப் ஆஃப் கம்பனிகாரர்களின் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வருகிறார். அவரிடம், ஓடிப்போன நாச்சியப்பன் வந்து விட்டதாக அவரிடம் சொல்லிக் கொண்டு இருக்கிறார் ஆத்தா. கோயில் மரியாதை திரும்பவும் இந்த குடும்பத்துக்கு வரவேண்டும் என்றால் நாச்சியப்பன் மனைவி தாலியை கழட்டி கொடுக்க வேண்டும் என அவர் சொல்கிறார். நாச்சியப்பனின் சகோதரி உமையாள், ஜனனியின் அம்மாவை வரவழைத்து நான் சடங்குகளை செய்ய வைக்கிறேன் என சொல்கிறாள்.
வக்கீல் வந்ததும் பதுங்கி இருந்த குணசேகரன் காரை விட்டு இறங்குகிறார். வக்கீல் பெயிலுடன் வந்ததால் குணசேகரனை கிளம்ப சொல்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் குணசேகரனுக்கு பெயில் எடுக்க உதவியது மெய்யப்பன் குடும்பத்தின் பேரன்கள் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி தான்.
ஜனனியின் அம்மா “சென்னைக்கு திரும்பி போக முடியாது, எங்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் இந்த உண்மை தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படுவாங்க. அதனால் உங்க பெரிய அண்ணன் குணசேகரன் வருவதற்கு முன்னர் நான் இங்கு இருந்து கிளம்புகிறேன்” என சொல்லிக் கொண்டு இருக்கும் சமயத்தில் குணசேகரன் வீட்டுக்கு வந்து இறங்குகிறார்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 8) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.