கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் 'BOMMI BABL' தொடர் ஒவ்வொரு எபிசோடிலும் மிகவும் சுவாரஸ்யமாகி வருகிறது. அனிருத்தும் பொம்மியும் ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர், ஆனால் அந்த நேரத்தில் சரஸ்வதிக்காக அனிருத் துளசி நகருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அனிருத் குழந்தை திருமணத்திற்கு ஏதிரானவர். சரஸ்வதியை மக்கள் திருமணம் செய்யும்படிவற்புறுத்துவதால், அந்த விஷத்தை அனிருத் கையில் எடுக்க முடிவு செய்கிறார்.


அனிருத் சமூகத்திற்கான தனது கடமைகளுக்காக தனது அன்பை தியாகம் செய்தார். பொம்மி குடும்பமும் சுமதியும் கோபமாக இருப்பதால் கிருஷ்ணா நகரில் ஒரு கடினமான சூழல் உருவாகிறது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையிலும், பொம்மி மற்றும் அனிருத் இருவரும் தங்கள் காதலில் நம்பிக்கை வைத்துள்ளனர்.


வரவிருக்கும் எபிசோடில், துளசி நகருக்கும் கிருஷ்ணாநகருக்கும் இடையிலான விரோதத்தைத் தீர்க்க அனிருத்தும் பொம்மியும் மீண்டும் இணைவார்கள். விரைவில், மகிழ்ச்சியான நாட்கள் மீண்டும் நிகழ்ச்சியில் வரும். குடும்பங்களுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்து, அனிருத்-பொம்மியின் பிரமாண்ட திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் முழு மனதுடன் தயாராகிறார்கள்.


அனிருத்தும் பொம்மியும் அழகான காதலில் ஈடுபடுவதைக் காணலாம். அதே நேரத்தில் குடும்பம் அவர்களின் உறவில் மகிழ்ச்சியடையும். நிகழ்ச்சியில் வெவ்வேறு கதாபாத்திரங்களின் பல நடனக் காட்சிகள் இருக்கும். திரிலோச்சந்திரன் (அனிருத்தின் பெரியப்பா) மற்றும் பொம்மியின் ஆச்சி இடையே ஒரு வேடிக்கையான காட்சியும் பார்க்கப்படும். அதில் அனிருத் தலையிட்டு நடனமாடுவார். ஆனால் திருமணம் நடக்காமல் இருக்க சந்திரஹாசன் என்ன செய்வார் என்பதே உண்மையான கேள்வி. பொம்மியின் மீதான மோகம் அனிருத்தை மீண்டும் பொம்மி திருமணம் செய்து கொள்வதை தடுக்க ஏதாவது செய்ய வைக்குமா? என்பதை எதிர்நோக்கி பொம்மி பிஏபிஎல் தொடர் நகர உள்ளது.


மேலும் படிக்க: Vijay Sethupathi: அழகை மட்டும் வைத்து நிலைத்து நிற்க முடியாது: கத்ரீனாவை வெட்கப்பட வைத்த விஜய் சேதுபதி


Kalaingar 100: திரையுலகம் எடுத்த கலைஞர் 100 விழா, நூற்றாண்டு நிலைத்திருக்கும்.. உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!