சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடர் கடந்த சில வாரங்களாக ஏராளமான ட்விஸ்ட்களுடன் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் நேற்றைய (ஜனவரி 5) எபிசோடில் வீட்டுக்கு வந்த ஆதிரை தன்னுடைய சர்டிபிகேட்களை கேட்க அதெல்லாம் தர முடியாது என எகிறுகிறான் கதிர். ஆதிரை உடன் வந்த சாருபாலாவையும் மரியாதை இல்லாமல் பேசவே இப்படி நடக்கும் என தெரிந்து தான் நாங்கள் போலீஸ் உடன் வந்து இருக்கிறோம் என சொன்ன பிறகுதான் கதிர் ஆட்டம் அடங்குகிறது. பின்னர் நந்தினி சைலண்டாக போய் ஆதிரையின் சர்டிபிகேட்களை எடுத்து வந்து கொடுக்கிறாள்.
ஸ்கூலில் இருந்தது வந்து கொண்டு இருந்த தர்ஷினியிடம் வலுக்கட்டயமாக கரிகாலனுடன் பைக்கில் செல்ல சொல்லி வற்புறுத்துகிறாள் ஜான்சி ராணி. அந்த நேரத்தில் அங்கு வந்த தர்ஷன் தர்சினியை அவர்களிடம் இருந்து மீட்டு வீட்டுக்கு அழைத்து செல்கிறான்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய (ஜனவரி 6) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
குணசேகரன் மற்றும் கதிர் ஆதிரை அவர்கள் மீது கேஸ் கொடுத்து இருப்பது பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடன் வக்கீலும் இருக்கிறார். "இது பற்றி உங்க வீட்டு பொம்பளைங்க கிட்ட விசாரிச்சா அவங்க சொல்லமாட்டாங்களா?" என வக்கீல் கேட்க "நிச்சயம் சொல்லுவாளுங்கப்பா" என்கிறார் குணசேகரன். அதை கேட்டு கதிர் டென்ஷனாகிறான்.
வீட்டுக்கு வந்த தர்ஷினி ஆவேசமாக ஜான்சி ராணியும் கரிகாலனும் என்ன செய்தார்கள் என்பதை பற்றி சொல்கிறாள். "ரோட்ல வைச்சு என்னை மடக்கி வலுக்கட்டயமாக பைக்ல ஏற சொல்லி என்னை டார்ச்சர் பண்ணாங்க" என தர்ஷினி சொல்ல அந்த நேரத்தில் பின்னாடியே வந்த ஜான்சியை ஓங்கி கன்னத்தில் அறைகிறாள் ஈஸ்வரி.
அப்பவும் அடங்காத கரிகாலன் "நான் தர்ஷினியை தூக்கிகிட்டு போய் கல்யாணம் பண்ணுவேன்" என நக்கலாக சொல்ல அங்கிருந்த அனைவரும் கடுப்பாக சக்தி எகிறி கொண்டு போய் கரிகாலனை தாக்குகிறான். "யார் வீட்ல வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க" என அவனையும் ஒரு அறை விடுகிறான் சக்தி. தரதரவென வாசல் வரை இழுத்து சென்று "எங்க வீட்டு பிள்ளை மேல கைவைப்பியா நீ" என கரிகாலன் நெஞ்சு மேலே ஏறி ஏறி மிதிக்கிறான் சக்தி. மகனை காப்பாற்றுவதற்காக ஜான்சி சக்தியை தள்ளிவிட முயற்சி செய்தாலும் சரியான மிதி வாங்குகிறான் கரிகாலன். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.
கடந்த சில நாட்களாக சக்திக்கு அதிக வாய்ப்பை கொடுத்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர். சக்தி ஆவேசமாக பேசுவதும், ஜனனிக்காக துணிச்சலாக அண்ணன்களை எதிர்த்து நிற்பதும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சக்தியின் நடிப்பையும் பாராட்டி வருகிறார்கள். கதைக்களமும் சுவாரஸ்யமாக நகர்ந்து வருகிறது. அதனால் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் எகிறி வருவதோடு பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.