சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (ஜனவரி 29) எபிசோடில் கதிர் தான் திருந்தி விட்டதாக சொல்லி ஞானத்துடன் தர்ஷினியை தேடி செல்ல கிளம்ப, குணசேகரன் அவர்களை திட்டி "இனி நான் தனி ஆள். எனக்கு யாரும் தம்பிகள் கிடையாது. என்னோட பிள்ளையை நானே தேடி கண்டுபிடித்து கொள்கிறேன்" என சொல்கிறார்.



"இவனுங்க பொண்டாட்டி எங்க இருக்காளுங்க என நான் சொல்லவா. அவளுங்க ஜீவானந்தத்தை காப்பாத்துறதுக்காக அங்க ஓடி போயிருக்காளுக. என்னோட மகளை எதிரி கிட்ட சேத்துட்டாளுங்க. நான் பாத்துக்குறேன்" என சொல்லி கிளம்பி விடுகிறார். அவர் அவமானப்படுத்தி பேசியதை நினைத்து கதிரும் ஞானமும் கண் கலங்குகிறார்கள்.




சக்தியும் மற்றவர்களுடம் விலாசத்தை தேடி கண்டுபிடித்து செல்கிறார்கள். அந்த வீட்டில் தர்ஷினியை கடத்த கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் இருக்கிறது. வீட்டு உரிமையாளர்களுடன் சக்தி சண்டை போடுகிறான். "எங்க கார் காணாமல் போய் இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் கிடைத்தது" என சொல்ல ஜனனி கார் எந்த இடத்தில் இருந்தது என்பதை அவர்களிடம் விசாரிக்கிறாள். திண்டுக்கல் நெடுஞ்சாலையில்தான் கிடந்தது என சொல்ல அனைவரும் அங்கே விரைகிறார்கள். சக்தி அந்த இடத்தில் இருந்த டீ கடை ஒன்றில் சென்று விசாரிக்கிறார்கள்.

அந்த கடைக்காரர் தர்ஷினியின் போட்டோவை பார்த்து அந்த பொண்ணு மயக்கமாக இருந்துது, வேறொரு காரில் மாத்தி கூட்டிட்டு போனாங்க என சொல்கிறார். அவர்கள் வேகமாக கிளம்ப சக்தி தண்ணீர் பாட்டில் வாங்கி கொண்டு திரும்புகையில் ஒரு கார் வேகமாக வந்து சக்தியை மோதிவிடுகிறது. பேச்சு மூச்சு இல்லாமல் சக்தி மயங்கி கிடக்க ஜனனியும் மற்றவர்களும் ஓடி வந்து ஆம்புலன்ஸ் மூலம் ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்கிறார்கள்.




சக்திக்கு இடுப்பு எலும்பில் கிராக் ஏற்பட்டுள்ளதால் ஒரு வாரத்திற்கு பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என டாக்டர் சொல்கிறார். ஈஸ்வரி ஒரு பக்கம் தர்ஷினியை நினைத்து வேதனைப்பட, மற்றொரு பக்கம் சக்தி அடிபட்டு ஹாஸ்பிடலில் இருக்கிறான். தர்ஷினிக்கு என்ன நடந்தது அவள் எங்கே இருக்கிறாள் என புரியாமல் தவித்து வருகிறார்கள். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.


அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யாவுக்கு ரேணுகா போன் செய்து பேசுகிறாள். ஐஸ்வர்யா ரேணுகாவிடம் "அப்பாவும் சித்தப்பாவும் போன் பண்ணி விசாரிக்கிறாங்க, ஆனா அவங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கல" என சொல்லிக்கொண்டு இருக்க அதை ஞானம் பார்த்து "யார்கிட்ட பேசிட்டு இருக்க?" என கேட்கிறான். அதை பார்த்து ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள்.

ராமசாமியையும், கிருஷ்ணசாமியையும் சென்று சந்திக்கிறார் குணசேகரன். அவர்களிடம் "என்னுடைய பொண்ணையே தூக்கிட்டான். அவனுக்கு வக்காலத்து வாங்குவது என்னோட எதிரி எஸ்.கே.ஆர் பொண்டாட்டி " என ஆவேசமாக பேசி கொண்டு இருக்கிறார்.



மறுபக்கம் ஹாஸ்பிடலில் ஈஸ்வரி நான் சென்று தர்ஷினியை தேடுகிறேன் என சொல்ல "இதுவரைக்கும் சேர்ந்து தானே வந்து இருக்கோம். நீங்க தனியா போக வேண்டாம். நம்ம பிள்ளையை கண்டுபிடிச்சு கூட்டிட்டு வரலாம் அக்கா" என ஜனனி ஈஸ்வரியிடம் சொல்கிறாள். இது தான் இன்றைய (ஜனவரி 30) எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.