சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் சொத்துக்கு ஆசைப்பட்டு தனது குடும்பத்துடன் போய் இணைந்து கொள்ள கைவிடப்பட்ட தன்னுடைய அம்மாவை வீட்டுக்கு அழைத்து செல்கிறார்கள் ஜனனி மற்றும் சக்தி. வீட்டுக்கு வந்த சம்பந்தியை விசாலாட்சி அம்மா அவமானபடுத்த கோபத்தில் கொந்தளித்த சக்தி நானும் வீட்டை விட்டு போகிறேன் என சொன்னதும் வாயை மூடி கொள்கிறார் விசாலாட்சி அம்மா. அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஜனனியின் அம்மா, நாச்சியப்பன் செய்த தூரோகத்தை பற்றி நினைத்து நினைத்து பார்த்து அழுகிறார். அவரை ஜனனி சமாதானம் செய்கிறாள். சக்தி வந்தது ஜனனியின் அம்மாவிடம் அவரை பற்றி கவலை பட வேண்டாம் என சமாதானம் செய்ய, ஜனனியின் அம்மா வருத்தப்படுவதை பார்த்த நந்தினி "ஆயிரம் தான் இருந்தாலும் அவங்களுக்கு கஷ்டமா தானே சக்தி இருக்கும்" என சொல்லி வருத்தப்பட அதை அங்கிருந்த சக்தி கேட்டு ஆவேசப்படுகிறான். "நீங்க எல்லாரும் இந்த மாதிரியே யோசிச்சுகிட்டு அழுகுறதால தான் அவனுங்க உங்களை ஏறி மிதிச்சுட்டு போய்கிட்டே இருக்காங்க" என சத்தம் போடுகிறான். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அதை தொடர்ந்து ராமசாமியும் கிருஷ்ணசாமியும் பேக்டரியில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நாச்சியப்பனை அவரின் ஆத்தா வீட்டுக்கு அழைத்து செல்கிறார். அவர்கள் சென்ற பிறகு " இப்ப இந்த பேக்டரி நம்ம பேரிலேயே இருந்துதுன்னா தான் ஜனனி அதை திருப்பி எடுக்க ட்ரை பண்ணுவா...இதுவே நாச்சியப்பன் பேரில் இருந்தா" என ராமசாமி மாஸ்டர் பிளான் போட கிருஷ்ணாசாமியும் அவர்களின் அத்தையும் பேசி சிரித்து கொள்கிறார்கள்.
வீட்டுக்கு வந்த ஞானம், விசாலாட்சி அம்மாவிடம் "உன்னோட ஆசை மகள் ஆதிரை இருக்கா இல்ல அவ எங்க மூணு பேர் மேலையும் கேஸ் கொடுத்து இருக்கா..." என சொல்ல அதை கேட்டு விசாலாட்சி அம்மா அதிர்ச்சி அடைய கதிர் கோபத்தில் கொந்தளிக்கிறான். ஆனால் அந்த இடத்தில் இருந்த நந்தினிக்கும் சக்திக்கும் இந்த தகவல் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
நாச்சியப்பன் செய்த இந்த துரோகத்தால் இடிந்து போய் இருக்கும் ஜனனியும் அவளின் அம்மாவும் இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள். ஜனனி மெய்யப்பன் குரூப் குடும்பத்தை சேர்ந்தவள் என்பது குணசேகரனுக்கு தெரிந்தால் அவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும். ஆதிரை போட்ட இடியால் கடும் கோபத்தில் இருக்கும் குணசேகரன் குடும்பம் எடுத்து வைக்க போகும் அடுத்த ஸ்டெப் என்ன. இனி வரும் எபிசோடுகளில் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.