தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் முத்துப்பாண்டி சண்முகத்தை கைது செய்து ஸ்டேஷனுக்கு கூட்டிச்சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். ரத்னாவை கூட்டிக்கொண்டு சவுந்தரபாண்டி வீட்டிற்கு வரும் பரணி, "சண்முகம் இந்த மாதிரி பண்றவன் கிடையாது, அது எனக்கு நல்லாவே தெரியும் இது எல்லாம் உங்களுடைய சதி தானே?" என்று சத்தம் போட, "எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என சௌந்தரபாண்டி கூறுகிறார்.
திரும்பவும் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர்களுக்கு வார்னிங் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியே வருகிறாள் பரணி.
மறுபக்கம் சண்முகம் ஸ்டேஷனிற்குள் முருகன் பாட்டை போட்டு தாயாக கேட்டுக் கொண்டிருக்க, முத்துப்பாண்டி பிரியாணி சாப்பிட்டு அவனை அடிக்கத் தயாராகிறான். அந்த நேரம் பார்த்து சௌந்தரபாண்டி போன் போட்டு அவனை அடிக்கிறது நான் என் கண் குளிர பார்க்கணும் என்று சொல்ல, வீடியோ கால் பண்ணவா என்று முத்துப்பாண்டி கேட்க, “வேண்டாம் நான் நேரிலேயே வரேன்” என்று சொல்லி கிளம்புகிறார் சௌந்தரபாண்டி.
சௌந்தரபாண்டி கிளம்புவதை பார்த்தேன் பாக்கியம் சண்முகத்த விட்டு சொல்லுங்க என்று சொல்லி கேட்க, “அதெல்லாம் முடியாது, விடலன்னா என்ன பண்ண போற? அன்னைக்கு உன் புள்ள மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு கொளுத்திப்பேனு மிரட்டுன மாதிரி மிரட்ட போறியா? கொளுத்திகிட்டு சாவு” என்று சொல்லீ அங்கிருந்து வந்து விடுகிறார்.
இங்கே ஸ்டேஷனில் முப்பிடாதி முத்துப்பாண்டி “உங்களுக்கு எதிரா பெருசா சதித்திட்டம்.. நீங்க இங்க இருந்து தப்பிச்சு போயிடுங்க” என்று சண்முகத்தை தப்பிக்க வைக்க, அவன் ஸ்டேஷனுக்கு வரும் சனியன் சௌந்தரபாண்டியை வழிமறித்து அவர்களுடன் செல்பி எடுத்து தர்மகத்தா தேர்தல்ல நிற்க வேண்டாம் என்று சொல்லி, “என்னை சீண்டி விட்டுட்டீங்க. இனிமே நான் சும்மா இருக்க மாட்டேன்.. என் அப்பா அருளோட உன்ன சூரசம்சாரம் பண்ணுவேன்” என்று வெறுப்பேற்றி விட்டு செல்ல சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். இப்படியான நிலையில் இன்றைய அண்ணா சீரியல் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவங்க தான்! சஸ்பென்ஸை உடைத்த அர்ச்சனா! ஷாக்கான விசித்ரா!
மேலும் படிக்க: Chinmayi: "பாலியல் சீண்டல் தந்த வைரமுத்துவுடன் மேடையை பகிர்வதா?" முதல்வர் உள்பட தலைவர்களுக்கு சின்மயி கேள்வி