சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (பிப்ரவரி 9 ) எபிசோடில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த குணசேகரன் "என்னுடைய சொத்தை அமுக்க வேண்டும் என்பதற்காக என்னோட வீட்டு பொம்பிளைகளை கைக்குள்ள போட்டுக்கிட்டு என்னோட பொண்ணை கடத்தி வைச்சு இருக்கான். அதுக்கு வசதியா இவனோட பொண்டாட்டியும் செத்து போயிட்டா" என குணசேகரன் சொல்ல "அவருடைய மனைவியை ஆள் வைச்சு கொன்னது நீங்க தான்" என ஜனனி சொல்ல "இந்த ஈஸ்வரி கூட சுத்துறதுக்காக அவனே அவனோட பொண்டாட்டியை கொன்னுட்டான். இப்போ தான் எனக்கு அது புரியுது. என்னோட பொண்ணை கடத்தினதுக்கு இந்த ஈஸ்வரியும், ஜீவானந்தனும் தான் காரணம். இவளுங்க மூணு பேரும் உடந்தை. என்னோட பிள்ளையை தயவுசெய்து காப்பாத்துங்க" என நடித்து விட்டு செல்கிறார் குணசேகரன்.
தர்ஷினி என்ன ஆனார்?
ஜீவானந்தம் மற்றும் நான்கு பெண்களையும் கோர்ட்டுக்கு அழைத்து வருகிறார்கள். வக்கீல் ஜீவானந்தத்திடம் சென்று என்ன நடந்தது என விசாரிக்கிறார். நடந்த உண்மையை எல்லாம் ஜீவானந்தம் அவரிடம் சொல்கிறார். "தர்ஷினியை கண்டுபிடிக்க முடியல. ஏதோ காரணத்துக்காக தான் குணசேகரன் இப்படி செய்கிறார். பொண்ணை காணவில்லை என அவங்க ஏற்கனவே வருத்தத்தில் இருக்காங்க. அவங்களை அழைத்து வந்து இப்படி பண்றது நியாயம் இல்லை. அவங்களை வெளியே விட்டால் தான் அவர்களால் சென்று பொண்ணை தேடி கண்டுபிடிக்க முடியும்" என சொல்கிறார் ஜீவானந்தம்.
எதிர்தரப்பு வக்கீல் குணசேகரனுக்கு ஆதரவாக பேசுகிறார். தர்ஷினியை இவர்கள் அனைவரும் கடத்தி வைத்து இருக்கிறார்கள் என சொல்லி அனைத்து பழியையும் ஜோடித்து பேசுகிறார். ஜீவானந்தம் தரப்பு வக்கீல் எடுத்து சொல்லியும் அது எதுவுமே எடுபடவில்லை. அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
நீதிபதி ஜீவானந்தத்தையும், பெண்கள் நால்வரையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க தீர்ப்பு வழங்கி விடுகிறார். இதனால் செய்வதறியாது அவர்கள் பதட்டப்படுகிறார்கள்.
வீட்டுக்கு வந்த ஈஸ்வரியின் அப்பாவிடம் "உங்க பொண்ணு என்னுடைய பொண்ணை கூட்டிகிட்டு அந்த ஜீவானந்தத்தோட ஓடி போயிட்டா" என சொல்ல ஆவேசப்பட்ட ஈஸ்வரியின் அப்பா குணசேகரன் சட்டையை பிடித்து "என்னையா சொல்ற" என கேட்கிறார். அவரை கதிர் அமைதிப்படுத்துகிறான்.
குணசேகரன் அவர்கள் அனைவரையும் போலீஸ் பிடித்து வைத்து இருப்பதை பற்றி சொன்னதும் "இதுக்கு மேல ஒரு நிமிஷம் இங்க நிக்க வேண்டாம். வா போகலாம்" என கதிர் சொல்ல "என்னை மீறி அங்க போனீங்க?" என குணசேகரன் மிரட்ட "அப்படி தான்யா போவோம். உங்களால ஆனத பாத்துக்கோங்க" என சக்தி சொல்லிவிட்டு கிளம்புகிறான். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ஹிண்ட்.