சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியலின் கடந்த வார எபிசோடில் ஆதிரை வீட்டுக்கு விட்டு எஸ்.கே.ஆர் வீட்டுக்கு சென்றதால் கடுப்பில் இருக்கிறார் குணசேகரன். கரிகாலன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து ரகளை செய்ய அனைவரும் அவனை பார்த்து பரிதாபப்படுகிறார்கள். அவன் தெளிந்த பிறகு மீண்டும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் குணசேகரன்.


 




கதிர் மருத்துவமனையில் இருக்க முடியாது என வீட்டுக்கு டிஸ்சார்ஜாகி வந்து விடுகிறான். அவனை அனைவரும் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள். கதிர் நந்தினி கையால் சாப்பிட முடியாது என பிடிவாதம் பிடிக்க தாரா கதிருக்கு ஊட்டிவிடுகிறாள்.



அந்த சமயத்தில் விசாலாட்சி அம்மா, குணசேகரன் அனைவரும் ரூமுக்குள் வர குணசேகரன் தாராவிடம் வாயை கொடுக்க சரியாக கேள்வி கேட்டு குணசேகரனை மடக்கி வாயடைத்து போக வைத்து விடுகிறாள்.


 




கிருஷ்ணன் மெய்யப்பன் தன்னுடைய அண்ணனை குணசேகரன் வீட்டுக்கு அழைத்து வருகிறான். அவனுக்கு ஏகபோக வரவேற்பை கொடுக்கிறார் குணசேகரன். அந்த வீட்டு விஷயங்கள் அனைத்தையும் புட்டு புட்டு வைக்கிறான். ஜனனியை தன்னுடைய எதிரி என சொல்ல அதை கேட்ட குணசேகரன் இவளை போய் உங்களோட எதிரின்னு சொல்றீங்களே என ஜனனியை அவமானப்படுத்துவது போல பேசுகிறார். அத்துடன் கடந்த வார எபிசோட் முடிவடைந்தது.

அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.


குணசேகரன் ஈஸ்வரிக்கு எதிராக எலெக்ஷனில் நிற்பதாற்காக போட்டோஷூட் நடத்துகிறார். ஜான்சி, காரிகனுடன் சேர்ந்து எல்லாம் போட்டோ எடுத்து கொள்கிறார். அதை பார்த்த ரேணுகாவும், நந்தினியும் குணசேரனை கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.


 




ஜனனியும் சக்தியும் வக்கீலை பார்த்து பேக்டரி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது வக்கீல் உடனடியாக அவர்களை பேக்டரியை திறந்து வேலைகளை துவங்க சொல்கிறார். அது குறித்த ஜனனியும் சக்தியும் யோசித்து கொண்டுகிறார்கள். அப்போது ஜனனி அவளின் தோழி வாசுவை வீட்டுக்கு அழைத்து வருகிறாள்.


 




நந்தினியின் ரேணுகாவும் வெளியில் வந்து வாசுவை வரவேற்கிறர்கள். எடுத்து வம்பு இங்கேயே உட்கார்ந்து பேசலாம் என நந்தினி சொல்ல பிரச்சினை வர வேண்டும் என்பதற்காக தான் நான் வந்திருக்கேன் என வாசு சொல்ல அதுவும் சரி தான் என நந்தினி உள்ளே அழைத்து செல்கிறாள். இது  தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட்.