சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு சென்றதால் ஜான்ஸியும் கரிகாலனும் கொளுத்தி கொள்கிறோம் என சொல்லி மண்ணெண்ணையை ஊற்றி கொள்கிறார்கள். கரிகாலன் இனி என்னால் வாழ முடியாது என மனசு வெறுத்து போய் பேசுகிறான். "ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு சென்றதால் நிம்மதியாக வாழ்ந்து விடுவாளா? அவள் சித்திரவதையை அனுபவிக்க போகிறாள். நீதான் இந்த வீட்டு மாப்பிள்ளை. அதை மாற்ற முடியாது. தர்ஷினிக்கு நான் உன்னை கட்டி வைக்கிறேன்" என வாக்கு கொடுக்கிறார் குணசேகரன். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி தட்டி கேட்க அவளை அடக்கி விடுகிறார் குணசேகரன். இவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை தர்ஷினி கேட்டு மனது வேதனை பட்டு அழுகிறாள்.
Ethirneechal : தர்ஷினி கொடுத்த ஷாக்.. ஆடிப்போன குணசேகரன்.. பரபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்
லாவண்யா யுவராஜ் | 22 Dec 2023 06:57 AM (IST)
Ethirneechal December 21 : லவ் மேட்டரை சொல்லி குணசேகரனை ஆடிப்போக வைத்த தர்ஷினிக்கு ஜனனி கொடுக்கும் அட்வைஸ். மனவேதனையில் கரிகாலன் என்ன செய்தான் தெரியுமா? எதிர்நீச்சலில் இன்று என்ன நடக்கிறது...
எதிர்நீச்சல் டிசம்பர் 21 ப்ரோமோ
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. தர்ஷினி லவ் பண்றேன் என சொன்னதும் எரிச்சலான குணசேகரன் "முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள லவ் பண்றீங்களா?" என கத்த "முளைச்சு மூணு இலை விடாத பொண்ணுக்கு தான் நீங்க கல்யாணம் பண்ணி வைக்கணும் என பேசிகிட்டு இருக்கீங்க" என சரியான பதிலடி ஜனனி கொடுக்க குணசேரன் முகமே மாறிவிடுகிறது.
உண்மையிலேயே தர்ஷினி காதலிக்கிறாளா அல்லது குணசேகரனிடம் இருந்து தப்பிப்பதற்காக அப்படி ஒரு பொய்யை சொன்னாளா? மீண்டும் ஆசையை காட்டி தன்னுடைய கௌரவத்திற்காக கரிகாலனை பலிகடாவாக மாற்றுகிறார் குணா. நாளுக்கு நாள் சூடேறி வருகிறது எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் என்பதால் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள் சின்னத்திரை ரசிகர்கள்.
Published at: 22 Dec 2023 06:57 AM (IST)