சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் எஸ்.கே.ஆர் வீட்டுக்குச் சென்று பிரச்சினை செய்வதற்காக தம்பிகள் மற்றும் கரிகாலனையும் அழைத்துக் கொண்டு செல்கிறார் குணசேகரன். அந்த சமயத்தில் ஆதிரை எஸ்.கே.ஆர் வீட்டுக்கு பெட்டி படுக்கையுடன் வந்து இறங்க, அவளைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. எஸ்.கே.ஆர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ள ஆதிரையை தரதரவென இழுத்து வருகிறான் ஞானம். ஆதிரையை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டு இருக்கிறார் குணசேகரன். அந்த நேரத்தில் போலீஸ் வந்து ஞானத்தை கேள்வி கேட்க "இது எங்க வீட்டு பொண்ணு... எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்கிட்டு இருக்கோம். போய் வேலையே பாருங்க" என போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் திமிராக பேசுகிறான் ஞானம். அதை சாருபாலா, அரசு மற்றும் எஸ்.கே.ஆர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
ஆதிரை என்ற கதாபாத்திரத்தை இப்போது தான் சரியாக பயன்படுத்துகிறார் இயக்குநர். ஆதிரை செய்த தப்புக்காக கரிகாலனுக்கு தன்னுடைய மகள் தர்ஷினியை கல்யாணம் செய்து வைப்பதாக சொல்வார் குணசேகரன் என்பது அனைவரின் யூகமாக இருக்கிறது. இத்தனை நாட்கள் முடங்கி இருந்த ஈஸ்வரி, தற்போது தான் தைரியத்துடன் துணிச்சலாக அவர்களை எதிர்கொண்டு வருகிறாள். அப்படி இருக்கையில் மகளை எப்படி பலி கொடுப்பாள்? நிச்சயம் குணசேகரனின் இந்த திட்டத்தை முறியடிப்பாள் ஈஸ்வரி. மீண்டும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு குறையாமல் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் மேலே உயர்ந்து வருவது சின்னத்திரை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.