ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் பைனல் நிகழ்ச்சி வரும் 17-ஆம் தேதி நேரடி ஒளிபரப்பாக உள்ள நிலையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 


தமிழ் சின்னத்திரையில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிங்கிங் ஷோ தான் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்  குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய வைக்கும் நிகழ்ச்சியாக சரிகமப மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. 


சரிகமப சீசன் 3 ( சீனியர்ஸ் ) நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 மொத்தம் 28 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். 


ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்ட்டை நடத்தி குழந்தைகளின் திறமையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ரிக்ஷிதா, கில்மிஷா, சஞ்சனா, ருத்ரேஷ் என நான்கு பேர் இதுவரை பைனலுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களை தொடர்ந்து இந்த வாரம் நடைபெற்ற ஃப்ரீ ஸ்டைல் ரவுண்டு மூலமாக நிஷாந்த கவின் மற்றும் கனிஷ்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 






இவ்வாறாக மொத்தம் 6 போட்டியாளர்களுடன் அனல் பறக்கும் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17-ம் தேதி நேரடி ஒளிபரப்பாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரில் காண ஆசைப்படுபவர்களுக்கு அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச டிக்கெட்டுகளை பெற சென்னை கிண்டியில் உள்ள ஜீ தமிழ் அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. 


நடுவர்களின் மதிப்பெண்கள் மட்டுமின்றி மிஸ்டு கால் மூலமாக மக்களின் ஓட்டுகளை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்யும் வகையில் இந்த கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மொத்தம் 6 போட்டியாளர்களில் டைட்டிலுடன் 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையை தட்டி செல்ல போகும் போட்டியாளர் யார்? என்பதை அறிய அனைவரும் ஆவலாக இருக்கும் நிலையில் ஒரு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது சமீபத்தில் சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தில் மீட்பு பணியில் சென்னை மட்டுமல்லாது வெளிமாவட்ட தூய்மை பணியாளர்களும் ஈடுபட்டனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பிதழை அர்ச்சனா வழங்கினார். இந்த செயல் பாராட்டை பெற்று வருகிறது.


மேலும் படிக்க


Udhayanidhi Stalin: அசுர வளர்ச்சி.. அமைச்சராக உதயநிதி பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு! செயல்பாடுகள் என்னென்ன?