சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் (Ethirneechal) தொடரில் கதிர் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கால்களில் கட்டுடன், பலத்த காயங்களுடன் இருக்கும் கதிரை பார்த்து அவனின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகிறார்கள். 


போலீஸ் வந்து கதிரிடம் அவனை தாக்கியவர்கள் யார் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்ட நந்தினி, கதிரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து தன்னுடைய கடமையை செய்து விட்டதாக சொல்லி இனி குடும்பத்தினரிடம் கதிரை பார்த்துக்கொள்ள சொல்லி விடுகிறாள். அவளை பெண்கள் அனைவரும் சமாதானம் செய்கிறார்கள். 


அதன் தொடர்ச்சியாக இன்றைய (டிசம்பர் 14) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.  


 



மருத்துவர் கதிரிடம் சென்று வலி எப்படி இருக்கிறது என்பது குறித்து விசாரிக்கிறார். வலி தாங்க முடியாமல் கதிர் மிகவும் அவஸ்தைப்படுகிறான். வெளியில் குடும்பத்தினர் காத்து கொண்டு இருக்க விசாலாட்சி அம்மா தேவையில்லாமல் வார்த்தைகளால் நந்தினியை நோகடிக்கிறார். "இன்னொருத்தனை கட்டிக்கலாம்னு பாத்திருப்பா" என வாய் கூசாமல் பேச கோபமான நந்தினி மாமியாரை அடக்க, "என்னடி அத்தை னொத்தனு" என மீண்டும் நந்தினியிடம் எரிந்து விழுகிறார் விசாலாட்சி அம்மா. 


கதிர் இருக்கும் அறைக்கு மகள் தாராவுடன் நந்தினி சென்று பார்க்கிறாள். அழுதுகொண்டே தாரா கதிரை கூப்பிட கதிர் முகத்தை திருப்பி கொள்கிறான். "அம்மா, அப்பா பார்க்க மாட்டேங்குறாரு மா" என நந்தினியிடம் சொல்லி அழுகிறாள் தாரா. "மூஞ்சியை திருப்பிக்குற. அப்பான்னு தானே கூப்பிடுச்சு" என கோபத்தில் நந்தினி கத்த, வெளியில் இருந்தவர்கள் ஏதோ பிரச்சினை என ரூமுக்குள் வேகமாக வருகிறார்கள். 


 



நந்தினியை பார்த்து கதிர் "ஏய் போடி என விரட்டுகிறான்". "யோவ் நீ பெத்த பிள்ளை தானேயா இது" என கத்த, அப்படியே காரசாரமான வாக்குவாதம் நடக்கிறது. வார்த்தைகளால் தாக்கப்படும் நந்தினி சொல்லியதை கேட்டு ஞானமும், சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஞானம் கதிரை அடக்கியும் அவன் வாயை மூடுவதாக இல்லை. நந்தினி விரக்தியில் அழுது துடிக்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal)  எபிசோடுக்கான ஹிண்ட்.


கதிர் கால் அவ்வளவு தானா? இனிமேல் அவனால் நடக்க முடியாதா? டாக்டர் என்ன சொன்னார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் விடை கிடைக்கும். இப்படி அடி பட்டு இருக்கும் போதே இந்த கதிர் இவ்வளவு பேசுகிறானே. அவன் திருந்தவே மாட்டானா? மனைவியை தான் கேவலப்படுத்துகிறான் என்றால் மகள் என்ன பாவம் செய்தாள். அவளிடம் ஏன் கோபத்தை காட்ட வேண்டும் என ரசிகர்கள் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கதிர் பேசுவதை அடக்காமல் இன்னும் மோசமாக வார்த்தைகளால் காயப்படுத்தும் விசாலாட்சி அம்மா மீது ரசிகர்களின் வெறுப்பு திரும்புகிறது. 


மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரிப்ரியாவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளைக் குவித்து வருகிறார்கள்.