சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரில் இதுவரையில் ஜனனியும் சக்தியும் சேர்ந்து தொடங்குவதாக இருந்த பிசினஸ்ஸை கிருஷ்ணன் மெய்யப்பன் என்ற ஒரு கேரக்டர் புதிதாக என்ட்ரி கொடுத்து குடைச்சல் கொடுத்து வந்தது. சில வாரங்களாக கிருஷ்ணனின் காட்சிகள் இடம் பெறாமல் இருந்த நிலையில் கடந்த வாரம் ஜனனியின் பேக் கிரவுண்ட் பற்றி விசாரிக்க குணசேகரன் வீட்டுக்கே வந்து நின்றார் கிருஷ்ணன் மெய்யப்பன்.
குணசேகரன் கதிரை ஏதோ வேலையாக வெளியே அனுப்புகிறார். கதிர் கிளம்பும்போது நந்தினி குறுக்கே வந்து "எங்க போறீங்க?" எனக் கேட்க, "கிரைண்டர் வாயை வைச்சுட்டாளே" என சொல்லி நந்தினியை திட்டுகிறார் குணசேகரன். கதிர் கிளம்பிச் செல்ல வழியில் சில மர்ம நபர்கள் கதிரைத் தாக்குகிறார்கள். சரமாரியாக கதிரைத் தாக்கி கீழே தள்ளி விடுகிறார்கள். இதை அந்த வழியாக சென்ற நந்தினியும் தாராவும் பார்க்க, கதிரை நோக்கி ஓடுகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ஹிண்ட்.
அதே போல ஜனனி பற்றின தகவல்களைக் கேட்டறிந்த கிருஷ்ணனின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும், ஜனனி தன்னுடைய சித்தப்பாவின் மகள் தான் என்ற உண்மை தெரிய வருமா, அது ஜனனிக்கு சாதகமாக இருக்குமா அல்லது பாதகமாக அமையுமா, ஜனனி எப்படி இந்த சிக்கல்களை சமாளிக்க போகிறாள் ஆகிய கேள்விகளுக்கு வரும் எதிர்நீச்சல் (Ethirneechal) சீரியல் எபிசோடுகளில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.