EthirNeechal: எண்ட்ரி கொடுத்த புது குணசேகரன்.. எரிமலையாக வெடித்த நந்தினி.. எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நடந்தது என்ன?

எதிர்நீச்சல் சீரியலில் புது ஆதிகுணசேகரனாக எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எண்ட்ரீ கொடுத்த நிலையில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். 

Continues below advertisement

எதிர்நீச்சல் சீரியலில் புது ஆதிகுணசேகரனாக எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எண்ட்ரீ கொடுத்த நிலையில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி காணலாம். 

Continues below advertisement

செவ்வாய்கிழமை எபிசோடில் சக்தி தன் அண்ணன் குணசேகரனுக்கு ஞானம் மற்றும் கதிர் ஆகியோரால் ஏதோ நடந்துவிட்டது என கூறி போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்கும் காட்சிகளும், அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸ் கைது செய்யும் காட்சிகளும் ஒளிபரப்பானது. இதனால் கோபம் கொள்ளும் விசாலாட்சி மருமகள்களை திட்டி தீர்ப்பதோடு, தான் அவர்கள் வரும் வரை சாப்பிட மாட்டேன் என சொல்லி வீட்டு வாசலில் அமர்கிறார். அப்போது நந்தினியின் அப்பா வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

நேற்றைய (அக்டோபர் 4) எபிசோடில் விசாலாட்சி, சம்பந்தியான நந்தினி அப்பாவிடம் அவளைப் பற்றி திட்டி தீர்க்கிறார். வாய்க்கு வந்தபடி பேசும் அவரைப் பேச்சை கேட்க முடியாமல் நந்தினி கிச்சனில் இருந்து பதிலடி கொடுக்கிறார். இதனால் கோபம் கொள்ளும் விசாலாட்சி இன்னைக்கு ஏன் பையன் வந்துருவான். அவன் வந்ததும் இவங்களோட உறவை முறிச்சிக்க சொல்லிட்டுறேன். இருந்து கூப்பிட்டுட்டு போங்க என தெரிவிக்கிறார். இதனால் நந்தினி அப்பா அதிர்ச்சியடைகிறார். அவர் எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டு நந்தினி கோபம் கொள்கிறாள். 

இதற்கிடையில் ஞானம் மற்றும் கதிரை பல இடங்களுக்கு அழைத்து சென்று ஆதிகுணசேகரன் பற்றி விசாரிக்கிறார்கள். அவர்கள் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட, போலீசாரிடம் அடி வெளுக்கிறார்கள். இந்த இடத்தில் புது ஆதி குணசேகரன் (நடிகர்வேல ராமமூர்த்தி) எண்ட்ரீ கொடுக்கிறார். அண்ணனை கண்டு தம்பிகள் இருவரும் சந்தோசப்படுகிறார்கள். தன் தம்பி மீதான தாக்குதலை கண்டு கொதித்தெழும் அவர் போலீசாரை தாக்குகிறார். தன் வக்கீலிடம் சொல்லி உண்டு இல்லை என பண்ணப்போவதாக மிரட்டுகிறார். 

பின்னர் குணசேகரன், ஞானம், கதிர் 3 பேரும் காரில் ஏறி வீட்டுக்கு செல்கிறார்கள். இந்த பக்கம் சமையலறையில் தன் அப்பாவிடம் நந்தினி பேசுவதை கண்டு கடுப்பாகும் விசாலாட்சி, அங்க என்ன முனுமுனுப்பு என கேட்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே போகும் நந்தினி, அவரிடம் போய் சண்டை போடுகிறார். கை ஓங்கும் நிலையில் விசாலாட்சியை தடுக்கிறார். பின் இந்த வீட்டில் சமைப்பது தொடங்கி ரூல்ஸ் போட்டு தான் எப்படி அடிமையாக நடத்தப்படுகிறேன் என்பதை அழுதுக்கொண்டே விளக்குகிறார். 

தன் அப்பாவிடம் அவங்க திரும்ப வீட்டுக்கு வந்து வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பாங்க. நீங்க அவசரப்பட்டு என்னை கூப்பிட்டு போறேன்னு சொல்லிடாதீங்க. இந்த வீட்டுல தீர்க்க வேண்டிய கடன் நிறைய இருக்கு. நானும் அவங்க வர்றதுக்காக தான் வெயிட் பண்றேன். சண்டை போட்டுட்டு தான் போவேன் என முறுக்கிக்கொண்டு நிற்கும் காட்சிகளோடு இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.


மேலும் படிக்க: Leo Trailer: லியோவில் இதுக்கும் தடையா - அடுத்தடுத்து விஜய்க்கு கொடுக்கும் நெருக்கடியால் ரசிகர்கள் ஏமாற்றம்

Continues below advertisement
Sponsored Links by Taboola