லியோ படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை ரோகிணி தியேட்டர் முன்பு பெரிய திரையில் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் சோகத்தில் உறைந்துள்ளனர்.
லியோ படம் அறிவிக்கபட்டத்தில் இருந்து அதன் ஒவ்வொரு அப்டேட்களையும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இதில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் பின்னணி இசை அமைத்துள்ளார். லியோ படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் கடந்த 30ம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல்கள் பரவியது.
ஆனால், பாதுகாப்பு காரணம் காட்டி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் லியோ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்றும், அதுவும் சன் டிவி யூடியூப் சேனலில் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. வழக்கமாக விஜய் படங்களின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரோகிணி தியேட்டர் முன்பு திரண்டு, பெரிய ஸ்கிரீனில் அதை போட்டு பார்த்து உற்சாகம் அடைவார்கள்.
விஜய் டிரெய்லரை ரசிகர்கள் ஒன்று கூடி பார்த்து கொண்டாடுவது சோஷியல் மீடியாக்களிலும் டிரெண்டாகி ட்ரோல் செய்யப்படும். அந்த வகையில் லியோ படத்தின் டிரெய்லரும் நாளை ரோகிணி தியேட்டர் முன்பு பெரிய ஸ்கிரினில் போட்டு கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரேஒரு இன்ஸ்டகிராம் பதிவால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனது. லியோ டிரெய்லரை பெரிய ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்தால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடுவார்கள் என்றும், அதனால் ரோகிணி தியேட்டரில் பெரிய ஸ்கிரீனில் லியோ டிரெய்லர் வெளியிட அனுமதி மறுக்கப்பட்டதாகவும் ரேவந்த் சரண் தெரிவித்துள்ளார்.
அதிகாலை 4 மணி காட்சிகள், இசை வெளியீட்டு விழா, டிரெய்லர் வெளியீடு என விஜய்யின் லியோ படத்துக்கு ஏகப்பட்ட அனுமதிகள் மறுக்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க: Ranbir Kapoor: ஆன்லைன் சூதாட்ட வழக்கில் ரன்பீர் கபூருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.. பாலிவுட் திரையுலகில் பரபரப்பு..!