பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் 10வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பிரதீப் ஆண்டனி - நிக்ஸன் இடையே கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 10வது நாளை எட்டியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நடப்பு சீசனில்  நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி, பவா செல்லத்துரை, வினுஷா தேவி, டான்ஸர் ஐஷூ, விஜய் வர்மா, சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, யுகேந்திரன் வாசுதேவன் உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 


இதில் முதல் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா ராவ் வெளியேறினார். தொடர்ந்து உடல்நலக்குறைவால் பவா செல்லதுரை வெளியேற, 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு மூலம் அடுத்ததாக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 






நிக்ஸனை பார்த்து பிரதீப், “உனக்கு பேச தகுதியே இல்லை. உட்காரு” என சொல்லி விட்டார். இதனைக் கண்டு கடுப்பாகும் நிக்ஸன், “எப்படி என்னை பார்த்து அப்படி சொல்லலாம்?. நீங்க யாரு முதல்ல.. உழைச்சி பாட்டு பாடி பசியில் இருந்து நான்  உள்ளே வந்துருக்கேன். என்னை பார்த்து தகுதி இல்லன்னு சொல்ல உனக்கு தகுதியே கிடையாது. நீ யாருன்னு தெரியுமா?., வெளியில இந்த கேமை பக்காவா புரிஞ்சிகிட்டு இப்படி ஒரு கேவலமான ஸ்டேட்டர்ஜி வச்சி ஆடி இதனை ஜெயிக்கணும்ன்னு எந்த அவசியமும் இல்ல. உன்கிட்ட திறமை இல்ல. என்கிட்ட இருக்கு. பாடி காட்டு, ஆடி காட்டுன்னு பேசாத. உனக்கு வரலையா மூடிட்டு உட்காரு” என கடுமையான வார்த்தைகளோடு தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் இந்த ப்ரோமோவில் இடம் பெற்றுள்ளது. 


நாளுக்கு நாள் வரம்பு மீறும் வார்த்தைகளோடு ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி எதிராக கருத்துகளும் வெளிப்பட தொடங்கியுள்ளது. இதற்கு கமல்ஹாசன் விரைவில் தீர்வு காண்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.